பக்கம்:கல்வி உளவியல்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 409 மதிப்பிடுதல்: வகுப்பறைகளில் மாளுக்கர்களின் வேலைகளை மதிப்பிடுதல் முற்றிலும் ஆசிரியருடைய வேலையே என்று நீண்ட காட் களாகக் கருதப்பெற்று வந்தது. இதல்ை மாளுக்கர்கள் யாவரும் ஆசிரியரையே சார்ந்திருக்க வேண்டியதாக இருந்தது. இதல்ை கற்போர் கற்பதன் காரணங்களை அறிந்துகொள்ள முடியாத நிலையிலிருந்தனர். கற்றலின் காரணங்களை மதிப்பிடுதலில் நோக்கங்களை முன் நிறுத்தும் பயிற்சி, அளத்தல்மூலம் தேவைகளை அறிதல், மேலும் செய்யவேண்டி யவைகளுக்குத் திட்டமிடுதல் ஆகியவை பங்குபெறும். இதில் ஆசிரியர் மானுக்கருக்கு (i) பல்வேறு பகுதிகளில் தாமாகவே நோக்கங்களைத் தீர்மானித்தல்; (ii) தம்முடைய தனிப்பட்டனவும் குழுவிற்குரியன வுமான தேவைகளைக் கண்டறிதல்; (iii) இவ்வாறு கண்டறிந்த குறைகளை எதிர்ப்பதற்கு அல்லது நீக்குவதற்கு உரிய கற்கும் செயல் களப்பற்றிய திட்டங்களை வகுத்தல் என்ற முறைகளில் துணை செய்யலாம். ஆசிரியர்-ஆசிரியர் உறவுகள் : பழைய காலத்தில் பெரும் பாலான ஆசிரியர்கள் தம்முடைய தொழில் வளர்ச்சியும் தொழில் பற்றிய செயல்களும் வகுப்பறையுடன் கின்று விடுகின்றன என்று கருதினர். ஆசிரியரின் வகுப்பறைச் செயல்கள் மிகவும் இன்றியமை யாதவை என்பது உண்மையே. எனினும், இன்று வகுப்பறைக்குப் புறம் பேயும் ஆசிரியர்கள் தம் தொழிலில் வளர்ச்சி பெறக்கூடிய ஆற்றல் தன் மைகள் இன்னும் அதிகமாக உள்ளன என்பதை அறிந்துள்ளனர். அவற் றுள் ஒன்று ஆசிரியர்.ஆசிரியர் உறவு. நவீன பள்ளியின் முன்னேற்றம் பெரும்பாலும் ஆசிரியர்களின் ஒத்துழைக்கும் விருப்பத்தையும் திறனையும் பொறுத்தது என்பது குன்றின் மேலிட்ட விளக்கு போலாம். பல துறைகளில் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மிகமிகத் தேவை. அவற்றுள் ஒன்று கல்வி ஏற்பாட்டினே’’ அடிக்கடி மாற்றுதல் ஆகும். ஒரு மாளுக்கனின் கல்வி அனுபவங்கள் தொடர்ந்து ஐக்கியப்படுத்தப்பெருவிடின், ஓர் ஆசிரியர் வழிகாட்டும் முறைகள் இன்னெரு ஆசிரியர் வழிகாட்டும் முறைகளுடன் முரண்பட்டு நிற்கும், சில பள்ளிகளில் ஒரு மாளுக்கன் செய்ய வேண்டிய வீட்டு: வேலையை எண்ணும்பொழுது இவ்வுண்மை தெளிவாகும். ஒவ்வொரு ஆசிரியரும் தம் பாடமே முக்கியமென்று கருதி மாளுக்கர் நிலையையும், அவன் வீட்டில் பெறும் வசதிகளையும், பிற ஆசிரியர்கள் தரும் வீட்டு 22. ssosa srpur (B-curriculum.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/431&oldid=778435" இலிருந்து மீள்விக்கப்பட்டது