பக்கம்:கல்வி உளவியல்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 கல்வி உளவியல் பயிற்சிகளை ஆயத்தம் செய்யும் முறையில் மாற்றம் அல்லது தான் மேற் கொண்ட மூலவகைகளில் திருத்தம்,அல்லது மாளுக்கர்கட்குப் பல்வேறு முறைகளில் வழிகாட்டுதலை ஒவ்வொன்ருகச் சோதித்தல் போன்றவை அடங்கும். இங்ங்ணம் வேறு ஆசிரியர்கள் சோதித்துக் கண்ட முடிவு களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பத்தாம் பசலி முறைகளைக் கையாளுவ தால் ஏற்படும் தீங்குகளைவிட இவ்வாறு புதிய முறைகளைக் கவனமாக மேற்கொண்டு சோதித்தலால் அதிகமான தீங்குகள் நேரிடுவதில்லை. ஒப்பந்த-ஆயத்தம்: மேம்பாடு காணவேண்டிய துறைகளுள் ஒன்று ஒப்பந்த-ஆயத்தம் ஆகும் என்பது ஆராய்ச்சியால் கண்டறியப் பெற்ற முடிவாகும். ஆசிரியர்களே ஆயத் தம் செய்யும் ஒப்பந்தங்களே?? விட ஆசிரியர்-மாளுக்கர் கலந்து ஆயத்தம் செய்யப்பெறும் ஒப்பந் தங்கள் மிகவும் பயன்தரத் தக்கவை. மேல்வகுப்பு மாளுக்கர்கள் இத் துறையில் கன்முறையில் துணைபுரிதல் கூடும். கட்டுப்பாட்டுச் செயல்கள்: மாளுக்கர்களை அடக்கி ஒடுக்கி வைத்திரா விட்டால், அவர்கள் தலை கொழுத்துவிடுவார்கள் என்பது பல ஆசிரியர்களின் கருத்து. இஃது அவ்வளவு சரியன்று. இதுகாறும் வகுப் பாட்சி எதேச்சாதிகார முறையில்’’ இருந்தது. ஆனல், கூட்டாட்சியில் அதிக நன்மைகள் ஏற்படுகின்றன என்று இன்று சோதனையால் கண்டறி யப்பெற்றுள்ளது. மாளுக்கர்கட்குத் தனிச் செயல்களிலும் கூட்டுச் செயல்களிலும் பொறுப்புக்களைத் தருவதால் கற்றல் செயல்களில் அவர்கள் அதிக அக்கறை காட்டுகின்றனர். இதுகாறும் மாளுக் கர்கள் ஆசிரியர்களையே சார்ந்திருந்தமையாலும், ஆசிரியர்கட்கும் மக்க ளாட்சி முறையை வகுப்புக்களில் கையாளும் பழக்கம் இல்லாமை யாலும் தொடக்கத்தில் மேம்பாடு மெதுவாகவே காணப்பெறும்; நாள டைவில்தான் அதிக மேம்பாடு எய்தமுடியும். - மூலங்களைக் கையாளும் வகை : மூலங்களைக் கையாளும் விதமும், தனியாள் வேற்றுமைகளைக் கவனித்தலும் நெருங்கிய உற வினைக் கொண்டவை. புத்தகங்கள், இதழ்கள், ஏனைய மூலங்கள் ஆகிய வற்றைத் தனியாகவும், குழுவாகவும் படிப்பதற்குத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் மாளுக்கர்களுக்குத் தக்க பயிற்சிகளைத் தருதல் வேண்டும். அங்ங்னமே பிலிம்கள், படங்கள் முதலியவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • 0 ஒப்பந்தம்-assignment. 2: எதேச்சாதிகார முறையில்-autocratic,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/430&oldid=778434" இலிருந்து மீள்விக்கப்பட்டது