பக்கம்:கல்வி உளவியல்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 கல்வி உளவியல் முதலில் குடும்பம்தான் குழந்தையிடம்சமூகப் பண்பை வளர்க்கும், ஒரு குடும்பத்தில் பல குழந்தைகளிருப்பின் அவர்களுக்கேற்றவாறு குழந்தை பொருத்தமுறக் கற்றுக்கொள்கின்றது. அக்கம்பக்கத்திலுள்ள பிற குழந்தைகளுடன் இக்குழந்தை பழகுவதால் இச்சமூகப் பண்பு மேலும் வளர்ச்சியடைகின்றது. குழந்தையின் குடும்பத்தில் இப்பண்பு கன்முறையில் வளர வாய்ப்பு இராவிட்டால் பள்ளியிலாவது இப்பண்பு கன்முறையில் வளர்க்கப்பெறுதல் வேண்டும். இதற்குப் பல வாய்ப்புக்கள் பள்ளியிலுள்ளன. பிற மாணுக்கர்களுடன் பழகுதல், அவர்களுடன் கூடி விளையாடுதல், வேலை செய்தல், பிற மாளுக்கருடைய புகழ்ச்சி இகழ்ச்சி, அவர்களுடன் போட்டி போடுதல், ஒத்துழைத்தல் போன்றவை குழந்தை யிடம் சமூக உணர்ச்சியை உறுதிப்படுத்தி நல்வழிகளில் வளர்க்க வாய்ப் பளிக்கின்றன. சிறிது காலமாகவே சமூக உணர்ச்சியை வளர்க்கவேண்டும் என்று கல்வி நிபுணர்கள் கூறி வருகின்றனர்; அதனைச் சிறப்பாக வற் புறுத்துகின்றனர். இதுகாறும் கல்வி உளவியலை மட்டிலும் பயின்ற ஆசிரியர்கள் இப்பொழுது சமூகவியலையும் சேர்த்துப் பயில்கின்றனர். காரணம், கற்றல் சமூகச் செயலாக இருப்பதுதான். பிறரிடமிருந்தோ பிறருடனே கற்கின்ருேம். பிறருடைய பாராட்டும் இகழ்ச்சியும் கற்றலைப் பாதிக்கின்றன. ஆசிரியர்-ஆசிரியர் ஊடாட்டம்"9, ஆசிரியர்-மாளுக்கர் ஊடாட்டம், மாளுக்கர்-மாணுக்கர் ஊடாட்டம் ஆகியவை கற்றலின் அளவை அறுதியிடுகின்றன. ஆசிரியர் சொல்வதைக் கேட்டுப் பின் பற்றலைவிட அவருடைய செயலையே மாளுக்கர் கவனித்துப் பின்பற்று கின்றனர். ஆகவே, ஆசிரியரின் பொறுப்பு அதிகமாகின்றது. இதல்ை தான் சமூகம் ஆசிரியரிடம் உயர்ந்த அறநெறித்தரத்தை எதிர்பார்க் கின்றது. குழந்தையின் நலனை யெண்ணி அதற்குப் பாலூட்டும் தாய் பத்தி யத்தை அனுசரிப்பதுபோல,ஆசிரியரும் தம்மிடம் பயிலும் மாணுக்கர்களின் நலனை யெண்ணிப் பல துடிப்புக்களை அடக்கிக்கொண்டு பல விரதங்களே’ அனுட்டிக்க வேண்டியிருக்கின்றது. உண்மையாசிரியர்கள் பலர் விரதியர்களாகவே வாழ்கின்றனர். - நாம் ஒவ்வொருவரும் பல்வேறு சமூகங்களின் உறுப்பினர்கள். ஒவ் வொருவருடைய குடும்பம், தொழில், சமயம், பொழுது போக்குக் கழகம், அரசியல் கட்சி வேறுபட்டவை. அவைகளில் ஈடுபடுங்கால் பழைய வழக் காறுகளை ஏற்றுக்கொள்ளுகின்ருேம்; புதிய பழக்க வழக்கங்களை ஆக்கிக் கொள்ளவும் முயலுகின்ருேம். சமூகத்துடன் அன்பாகவும் இணங்கியும் song...m --th - interaction.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/442&oldid=778460" இலிருந்து மீள்விக்கப்பட்டது