பக்கம்:கல்வி உளவியல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கல்வி உளவியல் கின்றன் ; ஓரளவு ஒருவாறு சூழ்நிலைகளையும் மாற்றி அமைக்கின்றன். இங்ங்ணம் கொடுத்து வாங்கும் அனுபவத்தினுல் அறிவு உண்டாகின்றது; திறமை ஏற்படுகின்றது; உள்ளக்கிளர்ச்சி மாற்றங்களும் கடைபெறு கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த விளைவுகளே அனுபவம் என்பதும் கற்றல் என்பதும். விரிந்த பார்வையில், கல்வி என்பது இந்தப் பொருத்தப் பாடேயாகும். கல்வி என்பது பொருத்தப்பாடே ; பிறந்த குழந்தையும் பள்ளி யில் சேரும் மாளுக்கனும் பெளதிகச் சூழ்நிலைக்கும் சமூகச் சூழ்நிலைக்கும் பொருத்தப்பாடு அடைவதில் பிறர்உதவியை நாடுகின்றனர். பெற்ருே கும் ஆசிரியரும் தக்கவாறு இவர்கட்கு உதவவேண்டும். எல்லாவிதப் பொருத்தப்பாடுகளுள்ளும் தனியாளின் தேவைகளுக்கும், அத்திதவை கன கிறைவேற்றச் சூழ்நிலை அளிக்கும் வாய்ப்புக்களுக்கும் தனிய்ாளின் திறமைக்கும் இடையேயுள்ளதோர் சிக்கலான சம்பந்தம் அடங்கியுள்ளது. சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதல்ை நாம் விரும்பும் துலங்கல்கள் ஏற் படாவிடினும், குறிப்பிடத்தக்க விளைவுகள் ஒழுங்கான முறையில் ஓரளவு ஏற்படத்தான் செய்கின்றன. இந்த உண்மையின் அடிப்படையில்தான் கல்வி என்பது அமைகின்றது. ஆழ்ந்து சிந்திப்பின், இப்பொருத்தப் பாடே கல்வி என்ருகிறது. எனவே, கல்வி ஏற்பாட்டின் முதல்விதி யாது? நிகழ்ச்சிகள், செயல்கள், தொடர்புகள் முதலியவற்றைத் திட்டமிடுங்கால் அவற்றிற் கொத்த பொருள்களைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இவ்வாறு ஒழுங்காக அமைந்த அனுபவங்களினல் கற்போரிடம் ஏற்படும் துலங்கல்கள் குறிப்பிடத்தக்க செய்தியைத் திரட்டித் தருகின்றன ; அவர்களிடம் பயன்படத்தக்க பழக்கங்கள் ஏற்படுகின்றன. சொந்தமுறையில் பண் பாடும் சமூக வாழ்வும் அமைவதற்கேற்ற மனவெழுச்சியின் பலன்களும் திரள்கின்றன. சமூகமும் ஒழுங்கான கல்வியினல் கற்போரிடம் சரியான பொருத்தப்பாடு அமைவதற்கேற்ற நிலைமைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பு கின்றது. இதல்ை நல்ல, பரந்த, விதவிதமான அனுபவங்களை உறுதி யாகப் பெறவும் எண்ணுகின்றது. இங்ங்ணமே பள்ளியாட்சியும், பயிற்றும் முறைகளும் செளகரியமான சூழ்நிலை, பரிவுடையவழி, தூண்டவல்ல தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கற்றல் அனுபவங்களை அமைத்துத் தர வழிகோலவேண்டும் ; காலக்குறைவிலும் முயற்சிச் சிக்கனத்திலும் தக்க பொருத்தப்பாடுகள் அமைதல் வேண்டும். & &&òçß srĝum G}---curriculum.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/47&oldid=778519" இலிருந்து மீள்விக்கப்பட்டது