பக்கம்:கல்வி உளவியல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கல்வி உளவியல் பொருள் என்றவற்றிடம் காணப்பெறும் தன்மையைக் குறிக்க இயல்பு' என்ற சொல் வழங்கப் பெறுதலின் ஈண்டு நாம் குறிக்கும் தன்மையை யுணர்த்த 'ஆளுமை' என்ற சொல் மேற்கொள்ளப்பட்டது. இராமனைக் கம்பன் ஆளுமைப் பண்புக் கூறுகள்’ அனைத்தையும் கொண்ட ஒரு பெருமகளுகப் படைத்துள்ளான். அனுமன் மூலம் சுக்கிரீவன் இராம இலக்குமணர்களின் சிறப்பையெல்லாம் அறிகின்ருன், இராம இலக்குமணர் தூரத்தில் வரும்பொழுதே அவர்களின் புறத்தோத் றங்களில் ஈடுபட்டு நெடிது நோக்குகின்ருன் ; நான்முகன் படைப்புக் காலக்தொட்டு அன்றுவரை செய்த கல்வினைகள் யாவும் திரண்டு இரு வடிவங்களாகி விட்டனபோலும் என்று எண்ணுகின்றன். இறுதியாக, " தேறின ன் அமரர்க் கெல்லாம் தேவராம் தேவர் அன்றே மாறியிப் பிறப்பில் வந்தார் மானிட ராகி மன்னே : ஆறுகொள் சடிலத் தானும் அயனும் என்(று) இவர்கள் ஆதி வேறுள குழுவை யெல்லாம் மானுடம் வென்ற தன்றே ’8 என்று ஒரு முடிவுக்கு வருகிருன். ஆளுமையின் பண்புக் கூறுகள் அவர்களிடம் ஒன்றேனும் குறைவின்றி யிருந்தமையால் சுக்கிரீவன் அவர் களைப் புருடோத்தமனது அவதாரமே என்று கருதுகின்றன். இங்ங்னம் இராம இலக்குமணர்கள் ஆளுமையின் பண்புக் கூறுகள் நிறைந்தவர்க ளாகக் காட்சியளிக்கின்றனர். சமூகத்தில் கலந்து பழகும்பொழுதுதான், நாம் மேற்கூறிய இவ் ஆளுமைப் பண்புகளைக் காண முடிகின்றது. நாம் ஒருவரைக் குறிப்பிடுங் கால் ஒத்துப்போகும் இயல்புடையவர்” என்கின்ருேம். இவ்வளவு மட்டிலும் சொன்னல் போதாது. ‘அ’ என்பவரும் 'ஆ' என்பவரும் ஒத்துப் போகிறர்கள் என்பதல்ை 'அ' என்பவரும், இ’ என்பவரும் ஒத்துப் போவார் என்பதில்லை. ஒத்துப் போதல் என்பது இருவரிடையே ஏற்படும் ஓர் உறவுமுறை அஃது ஆளுமைகள் இடைவினை இயற்றுவதைப் பொறுத்தது. இவ்வுலகில் நடைபெறும் மகிழ்வான திருமணங்களையும் மகிழ்வற்ற திருமணங்களையும் ஆராய்ந்து எந்தப் பண்புக்கூறுகள் மகிழ்ச் சிக்கு அல்லது மகிழ்ச்சியின்மைக்குக் காரணம் என்பதை அறிய முனைக்

  • பண்புக் கூறுகள் - traits. 8 கிட்கிங்-நட்புக்கோள்- 8:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/97&oldid=778674" இலிருந்து மீள்விக்கப்பட்டது