பக்கம்:கல்வி உளவியல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கல்வி உளவியல் போடுவதிலேயே உழல்வர்; தம்மைப்பற்றியே ஆராய்ந்து கொண்டிருப்பர்; சமூகத் தொடர்புக்கு அஞ்சுவர்; இவர்கள் எளிதில் ஒரு முடிவுக்குவாரார். புற முகர் என்போர் தம் உணர்ச்சிகளை எளிதாக வெளியிடுவர்; நிகழ்கால வாழ்வில் கருத்துடையவர்கள்; கைக்குக் கிடைக்கக் கூடியவற்றில் நாட்டம் செலுத்துபவர்கள். இவர்கள் எளிதில் முடிவுக்கு வருவர்; சமூகத்திலும் கன்ருகப் பழகுவர். ஆளுல், உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் அகமுகரு மல்லர்; புறமுகருமல்லர். அவர்களே இருமுகர்’ என்பதே பொருத்தமுடையதாகும். அனுபவத்தில் ஆளுமை : இவ்வுலகில் உடலை அடிப்படையாகக் கொண்டு மக்களைச் சிலர் தரமிடுவர். குட்டை, நெட்டை, பருமன், மெலிவு போன்ற உடலமைப்புக்குத் தக்கவாறு மக்களின் மனப்பண்பு அமைந்திருக்கும் என்று கருதுவர். மெலிவாக உள்ளவர் சூழ்ச்சித்திறம் வாய்ந்தவர் என்றும், உடல் பருத்திருப்பவர் நம்பத்தகுந்தவர் என்றும் ஆங்கில நாடக ஆசிரியர் செகப்பிரியர் கூறிப்போந்ததை ஆங்கில இலக்கியம் படித்தோர் அறிவர். சில உளவியலாரும் அங்ங்னமே கருது கின்றனர். எது எப்படியாயினும் தூம்பிலாச் சுரப்பிகளின் ஆட்சிக்குத் தக்கவாறு மக்களின் மீப்பண்பு அமைந்திருக்கின்றது என்பது மட்டிலும் உண்மை. ஆளுமையை அளத்தல் : ஆளுமையை அளக்கும்போது மேற் கூறிய பரந்த கூறுகளேயன்றி, தனிப்பட்ட மனப்பான்மைக் கூறுகளையும் கவனிக்கலாம். ஆதிக்கம்-பணிவு, விடாமுயற்சி-முயற்சியின்மை போன்ற கூறுகளில் தரமிடலாம். ஒருவருடைய உடலமைப்பு, மனநிலை, ஒழுக்கம், வழக்கம், எண்ணங்கள், மனப்போக்கு, மீப்பண்பு, இயல்பு, பண்பு, மனப்பான்மை, மனப்பாங்கு, காப்பழக்கம், மனப்பழக்கம், கைப் பழக்கம் முதலிய அனைத்தும் ஒருங்கு திரண்டு எந்தெந்த அளவில் அமைந்து எந்தெந்த வகையில் இயைபுபெற்று விளங்குகின்றன என்பத னைக் காணல்வேண்டும். இத்தகைய கூறுகள் அனைத்தையும் காட்டும் படம் ஆளுமைப்படம் எனப்படும். இவற்றினை அளப்பதற்கு (!) தனி யாள் முறை ; (2) தரமிடல்'; (3) பென்சில்-தாள் ஆளுமை அளக்கும் உபாயங்கள் , (4) நடத்தைச் சோதனைகள்1.2; (5) கண்டு பேசல் ’’ 7 @goper-ambiverts, e gribsorë e růst – ductiess gland. ‘9 15 sillsioru - temperament. i o.&g5sinipi uLlb - personality prOfile. 11 go toll so - rating. 12 mL-#505& 35 m oré gir - behaviour tests. ıs sairG Gugsö - interview. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/99&oldid=778678" இலிருந்து மீள்விக்கப்பட்டது