பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

கல்வி உளவியல் கோட்பாடுகள்


குழந்தையின் அழுகைப் பண்பை நன்குணர்ந்த ஒரு தாய் மற்றொரு குழந்தை அழுவதன் காரணத்தை அறிதல் அரிது. முதலாண்டு நிறைவேறுவதற்கு முன்னர் அச்சம், அன்பு, இன்பம் ஆகியவற்றை வெளிக்காட்டும் - அறிகுறிகளைக் காணலாம்.

வயது முயற்சியால் மாற்றம் : வயது முதிரமுதிர உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடும் சின்னங்கள் மாற்றம் அடைகின்றன. [எ-டு.] குழந்தைப் பருவத்தில் காலைக் கிள்ளினால் காலை மாத்திரம் வெடுக்கென்று இழுக்காமல் உடல் முழுவதையும் அசைத்த குழந்தை, இப்பொழுது காலை மட்டிலும் இழுக்கின்றது. உள்ளக்கிளர்ச்சி வெளிப்பாடு இவ்வாறு குறைந்து வருகின்றது. ஏழு அல்லது எட்டுத் திங்கள் நிறைவெய்திய குழந்தைக்குப் பசி எடுக்கும்போது பால் கொடுக்கத் தாமதம் செய்தால், அதன் உடல் எல்லாம் செயலாக அமைந்து விடுகிறது. உதைத்து. நெளிந்து, கத்திக் கரைகின்றது; வெறி கொண்டு அலறுகின்றது; சினத்தைக் கக்குகின்றது. குழந்தைmவளர வளர இச் செயல்கள் குறைகின்றன. ஏறக்குறைய ஏழு ஆண்டில் குழந்தை உடல் முழுவதையும் அலட்டிக் கொள்வதில்லை, உள்ளக் கிளர்ச்சியின் ஆடம்பரம் குறைந்து அச்சமும் வெகுளியும் அடங்கியே வெளிப்படுகின்றன. இப்பொழுது குழந்தை எதற்கெடுத்தாலும் அழுவதுமில்லை.

இங்ஙனம் மாற்றங்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. குழந்தைக்கு அதிக அனுபவம் ஏற்பட்டு விடுகின்றது. மொழியாலும் பிற குறியீடுகளாலும் தன் உணர்ச்சிகளை நுட்பமாகக் கூறும் திறமையைக் - குழந்தை பெறுகின்றது. வன்செயல்களாலும் முரட்டுத்தனத்தாலும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதை அறிகின்றது. பெற்றோரும் பிறரும் பாலமை[1] தவிர்தி[2] யென்றும், பெரிய பிள்ளையாக இருக்க வேண்டும் என்றும் குழந்தையை இடைவிடாது. வற்புறுத்துகின்றனர். சிறுவனும் நாள்டைவில் புண்பட்ட மனத்தையும் கண்ணீரையும் மறைக்கக் கற்றுக் கொள்ளுகின்றான். தன்னை அச்சுறுத்தவும் புண்படுத்தவும் சினப்படுத்தவும் கூடிய நிலை மைகள் உண்டென்பதைத் தானும் ஒப்புக் கொள்ளாமல், பிறருக்கும் வெளிப்படுத்தாமல் வாழ்த் தொடங்குகின்றான். பள்ளிக்குச் செல்வதற்குள் சிறுவனின் உணர்ச்சிகளில் பெரும்பான்மையானவை மறைகின்றன; அல்லது மாறுபடு-


  1. பாலமை -Childlishness
  2. சும்பரா-சிட்கிந்-வாலிவதை 148.