பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

கல்வி உளவியல் கோட்பாடுகள்


களும் ஒரே ஜீன்களைக் கொண்டும் ஒரே சூழ்நிலையிலும் இருக்கும்பொழுது வகைப்படுத்துதல் எங்கனம் நிகழ்கின்றது?

சூழ்நிலையைப்பற்றிய விரிந்த கருத்து இதை விளக்கத் துணை செய்கின்றது. ஒர் உயிரியினுள்ளிருக்கும் உயிரணுவின் சூழ்நிலை முழுஉயிரியின் சூழ்நிலையைப் போன்றதன்று. பிறக்காத உயிரி முழுவதற்கு வளர்ச்சிக்கு பொதுத்தேவையாக உள்ள உணவு, வெப்பம் போன்றவற்றைத் தந்து பயனுள்ள சூழ்நிலையாக இருப்பது தாயின் கருப்பையாகும். ஆயினும், ஓர் உயிரினுள்ளிருக்கும் ஏதாவது ஒர் உயிரணுவிற்கு அதைச் சுற்றியிருக்கும் பிற உயிரணுக்களே பயனுள்ள சூழ்நிலையாக அமைகின்றன. ஒரு சிறிது வகைப்படுத்துதல் செயல் நிகழ்ந்ததும், உயிரியின் பல்வேறு பகுதிகளிலுள்ள உயிரணுக்கள் பல் வேறுபட்ட சூழ்நிலைகளைப் பெறுவதுடன் பல்வேறுவித துண்டலையும் பெறுகின்றன. சில ஜீன்கள் ஒருவகைத் துரண்டலுக்கும், வேறு சில ஜீன்கள் வேறுவகைத் துண்டலுக்கு மாகத் துலங்குகின்றன. ஆகவே, ஒரே உயிரியின் பல்வேறு பகுதிகளிலுள்ள உயிரணுக்கள் பல்வேறுவிதமாகத் துலங்குகின்றன. கருவுற்ற முட்டையில் ஒரு சிறிய அளவில் வகைப்படுத்துதல் தொடங்கி படிப்படியாக வளர்கின்றது.

மிகத் தொடக்கநிலையில் மூன்று அடுக்குகளில் (புரைகளில்) உயிரணுக்கள் அமைகின்றன. அவை அமைப்பிலும் உருவத்திலும் பாகுபாடு அடைகின்றன. வெளிப்புரையிலிருந்து தோலும், உட்புரையிலிருந்து உள்ளுறுப்புகளும், நடுப்புரையி விருந்து தசைகளும் எலும்புகளும் துலக்கமுறுகின்றன. இந்த மூன்று புரைகளும் ஒன்றோடொன்று இடைவினையியற்றி ஒன்றையொன்று தூண்டி உடலின் பல்வேறு பகுதிகளை உண்டாக்குவதில் ஒன்றோடொன்று சேர்கின்றன. இந்தச் செயல்கள் யாவும் மிகச் சிக்கலானவை; கருவளர்ச்சியியல் வல்லுநர்கள்[1]வல்லுநர்கள் அதை முழுவதும் புரிந்து கொண்டுவிட்டதாக ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் நாம், ஓர் உயிரிக்குள்ளேயே இடை வினையியற்றும் பகுதிகளே வகைப்படுத்துதலின் அறுதியிடும் கூறாக அமைகின்றது என்று கூறலாம். இவ்வாறு இடைவினையியற்றுவதால் உயிரணுக்களில் சில நரம்பு அணுக்களாகவும், சில எலும்பு அணுக்களாகவும், சில தசையணுக்களாகவும் மாறி மக்கள் உருவம் பெறுகின்றன. இரண்டாம் திங்கள் இறுதியில் ஆதி நரம்பு மண்டலம் [2] அரைகுறையான கண்கள், காதுகள்,


  1. கருவளர்ச்சியியல் வல்லுநர்கள்-Embryologists
  2. ஆதி நரம்பு மண்டலம்-Primitive nervous system