பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடிவழியும் சூழ்நிலையும்

159


குடிவழியும் சூழ்நிலையும் மூளைக்கு முதிர்ச்சியே காரணமாகும்; ஆனால் தம்மிடமுள்ள பழக்கங்கள், நம்முடைய அறிவு ஆகியவை முதிர்ச்சியின் காரணமன்று. அவை யாவும் தூண்டல்-துலங்கல் செயலின் விளைவாக-அஃதாவது மூளை பயிற்சியளிக்கப் பெற்றதன் பலனாக-ஏற்பட்டவை; கற்றவை. நம்மிடமுள்ள அறிவும் பழக்கங்களும் பிறரிடம் இல்லாதிருக்கலாம். ஆகவே, முதிர்ச்சியால் ஏற்பட்டவை சாதாரணமாக அந்த இனத்தைச் சார்ந்த ஒவ்வொருவரிடமும் காணப்பெறும்,

இதிலிருந்து முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் தொடர்பு இல்லை என்று கொள்ளலாகாது. ஏனெனில், நாம் கற்பவையெல்லாம் நம்முடைய முதிர்ச்சியைப் பொறுத்தவை, என்னதான் தூண்டுலையும் துணையையும் கொடுத்தாலும் புனிற்றிளங் குழவிக்கு நடை கற்பிக்க இயலாது; ஆனால் போத்தலைப் பார்த்தவுடன் சப்பிக்குடித்தலைப் பயிற்றலாம். ஆறு திங்கள் குழந்தைக்குப் பெருவிரலையும் கட்டுவிரலையும் கொண்டு ஒரு சிறு கண்ணாடி உண்டையை (Pellet) எடுக்கக் கற்பிக்க இயலாது; ஆனால் கீலுள்ள ஒரு பெட்டியின் மூடியைத் துர்க்குவதில் அதனைப் பயிற்ற முடியும். ஓராட்டைப் பருவமுள்ள குழவிக்கு என்ன தான் முயன்றாலும் பெருக்கல் வாய்ப்பாட்டைக் கற்பிக்க முடியாது; ஆனால், அதனைக் கயிற்றில்கட்டிய பொருளை அண்மைக்கு இழுப்பதில் பயிற்சி தரலாம்.

முதிர்ச்சி, கற்றல்பற்றி உளவியலார் மேற்கொண்ட சில சோதனைகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் அறிதல் சாலப் பயன்தரும்.

சோதனை-1: கோவா என்பது வாலில்லாக் குரங்கின் பெண்குட்டி, டோனால்டு என்பவன் ஓர் ஆண்குழந்தை. கோவா டோனால்டை விட இரண்டு திங்கள் இளையது. இருவரையும் ஒரே வீட்டுச் சூழ்நிலையில் ஒரே மாதிரியாக வளர்த்தனர். எந்த அளவுக்கு கோவா மனித இயல்பினைப் பெறுகின்றது என்பது ஒரு நோக்கம். சில கூறுகளில் கோவா டோனால்டை விட விரைவாகக் கற்றது. கயிறு தாண்டுதல், வளர்ப்புப் பெற்றோருடன் ஒத்துழைத்தல், வேண்டுகோளுக்குக் கீழ்ப்படிதல், முத்தமிடல், சிறுநீர் மலங்கழித்தல் செயல்களை எதிர்பார்த்தல், கரண்டியால் உண்ணல், கண்ணாடிப் பாத்திரத் தால் பருகுதல், 'இங்கு வா’ 'முத்தந் தா' 'கைகுலுக்கு' 'கெட்டபெண்' போன்றவற்றை அறிதல் ஆகியவற்றில் டோனால்டைவிட கோவாவிடம் முன்னேற்றம் காணப்பட்டது; காரணம், அதனிடம் முதிர்ச்சி அதிகரித்திருந்தது. கோவா இளையதாயினும், உடல் வன்மையிலும் உளத்திண்மையிலும்