பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

கல்வி உளவியல் கோட்பாடுகள்



குழந்தைகளிடம் காணப்பெறும் சமூக உணர்ச்சி, அறிவு, உள்ளக் கிளர்ச்சி, மொழி இயக்கம் ஆகியவற்றின் வளர்ச்சியை முன்னரே விளக்கியுள்ளோம். அதனை மீண்டும் ஒரு முறை பயின்து இவ்விடத்தில் நினைகூர்க.

முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையே நடைபெறும் இடைவினை

குழந்தைபெறும் திறன்கள் இயற்கையாக முதிர்ச்சியின் பயனாக எழுகின்றனவா, அல்லது செயற்கைப் பயிற்சியின் பயனாக விளைகின்றனவா என்பதை அறிந்துகொள்ள வேண்டு மாயின் முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையே நடைபெறும் இடைவினையை ஆராயவேண்டும்.

முதிர்ச்சி என்பது உயிரியின் உள்ளிருக்கும் ஆற்றல்களின் இயக்கத்தால் தோன்றும் மாறுதலாகும். பயிற்சி என்பது சூழ்நிலையின் காரணமாக உயிரியிடம் எழும் மாறுதலாகும். பிறந்த பிறகும் அதற்கு முன்னரே தொடங்கிய பொறிநுட்பம் துலக்கமடைகின்றது. உயிரணுவின் எல்லைக்குள் உள்ள’ நிலைகளும், உயிரணுவிலுள்ள நிலைகளும் இன்னும் செயற் படும் நிலையிலேயே உள்ளன. எனவே, முதிர்ச்சி பிறப்பதற்கு முன்னுள்ளபடியே பிறந்த பின்னரும் நடைபெறுகின்றது. பிறந்தபின்னர் முதிர்ச்சியில் பங்குபெறும் முக்கிய செல்வாக்கு அதனை விரைவில் எய்தச் செய்தலே (பால் முதிர்ச்சி சில தட்பவெப்ப நிலைகளில் விரைவாக நடைபெறுவதுபோல்) அல்லது அதன் வளர்ச்சியைக் குறைத்தலே (உணவூட்டம் போது மானதாக இராதபொழுது சாதாரண வளர்ச்சியில் சில சமயம் தடை நேரிடுவது போல). .

முதிர்ச்சியால் நேரிடும் துலக்கத்தையும் தூண்டல்-துலங்கல், அல்லது கொள்வாய் நரம்பு, இயங்குவாய் பொறிநுட்பங் கனால் நேரிடும் துலக்கத்தையும் வேற்றுமைப்படுத்தி ஆராய வேண்டும். நாம் நம் புயத்தில் ஒர் இருதலைத் தசையைப் பெற்றிருப்பது முதிர்ச்சியைப் பொறுத்தது; நம்மிடம் உள்ள அதன் பருமனுக்கும் இன்னொருவரிடமுள்ள அதன் பருமனுக்கும் உள்ள வேறுபாடு முதிர்ச்சியைப் பொறுத்ததன்று; நம்மிடம் அஃது அதிகப் பருமனாக இருப்பதற்கு நாம் தொடர்ந்து கொடுத்த பயிற்சியே காரணமாகும். நம்மிடமுள்ள மானிட

82. Q&A sor-Interaction. 83. உயிரணுவின் எல்லைக்குள் உள்ள.Intra-cellular. 84. & loggysogyaror-Intercellular.