பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் i 57

சமநிலை பெறுவதிலும் தலை-உடல்-கால் என்ற ஒழுங் கினைக் காணலாம். 3-4 திங்களில் தலையை நிலையாகத் தூக்கி நிறுத்துகின்றது; 7-8 திங்களில் அசையாது அமர் கின்றது; கிட்டத்தட்ட 10.ஆம் திங்களில் ஒரு பொருளின் ஆதரவிலும், 12-ஆம் திங்களில் ஆதரவின்றியும் நிற்கின்றது. 10-11-ஆம் திங்கள் தொடங்கி ஆதரவுடனும், 14-ஆம் திங்களில் ஆதரவின்றித் தனியாகவும் நடக்கின்றது. நடப்பதில் முதலில் காலைப் பரப்பி வைக்கின்றது; கைகளையும் பரப்பி விரித்துக் கொண்டுள்ளது. சமநிலையில் முன்னேற்றம் அடைந்ததும், காலையும் குறுக்குகின்றது; கைகளும் வேறு செயல்களுக்குப் பயன்படுகின்றன. அங்கனமே சில சமயம் கால்களை அதிக உயரமும் சில சமயம் சிறிது உயரமும் துரக்கு கின்றது; முழுக்காவையும் பதிய வைக்கின்றது. குதிகால், விரல்கள் இவற்றின்மீது ஆதிக்கம் பெற நாளாகின்றது. நாளடைவில் வேகமாக நடக்கவும் ஒடவும் பழகி விடுகின்றது. இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்கினால் ஒவ்வொன்றிலும் முதலில் பயனற்ற இயக்கங்களும் வேண்டாத இயக்கங்களும் பங்கு பெறுவதையும், நாளடைவில் அவை குறைந்து வரு வதையும் காணலாம், . .

இச்செயல்களில் தொடர்பான ஒழுங்குமுறை இருப்பதற்கு முதிர்ச்சியே காரணம் ஆகும். சமநிலை பெறுவதிலுள்ள ஒழுங்கு முறையினை முதிர்ச்சியைக் கொண்டு விளக்குவோம். குழந்தை உட்காருவதற்கு முன்னர் தலையைத் துரக்கக் காரணம் என்ன? கழுத்து இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் இடுப்பு, கால் பகுதிகளின் இயக்கங்களைக் கட்டுப் படுத்தும் நரம்பு மையங்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே முதிர்ச்சியடைந்து விடுகின்றது. மனிதனின் நேராக நிற்கும் நிலையும் இடப்பெயர்ச்சியும் மிகச் சிக்கலான நரம்புகளின் பொறிநுட்பம் வாய்ந்தவை. இப் பொறிநுட்பம் முதிர்ச்சி யொன்றாலேயே கைவரக் கூடியது. குழந்தை நடக்கும் நிலை யில்தான் இது செயற்படக் கூடியதாகவுள்ளது. இங்கணமே, கற்றலும் இதில் பங்கு பெறுகின்றது. பயிற்சியும் பலப்படுத்தலும் திறமையான சமனிலைக்கும் இடப்பெயர்ச்சிக்கும் இன்றியமை யாதவை. ஆற்றல்கள் தம்மிடம் வளரவளர, குழந்தை அவற்றை மிக ஆர்வத்துடன் பயன்படுத்துவது அதன் தனிச்சிறப்பு. அவற் றிற்கு அதிகமான பயிற்சியளித்து அவற்றைப் பலப்படுத்தி விடு கின்றது. எனவே, முதிர்ச்சியும் கற்றலும் நடைவளர்ச்சியில் துணைசெய்கின்றன என்று முடிவு கட்டலாம்.

T81, Toronolo-Mechanism.