பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

கல்வி உளவியல் கோட்பாடுகள்




SSAS SSAS SSHHSHHSASAASAAAS

தடையை மேற்கொள்வதற்கு முன்பு, குழந்தையின் மூளை நன்முறையில் முதிர்ச்சி பெற வேண்டியதாகவுள்ளது. நடத் தவில் இரண்டு முக்கிய கூறுகள் உள: (1) நடத்தல் என்பது ஒரு நரம்பு மையத்தால் கட்டுப்படுத்தப்பெறும். ஓர் இயல்பான இயக்கம்; இந்த நரம்பு மையம் முதிர்ச்சியால் துலக்கமுறுவது. நடத்தல் ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்டு செயற்படக் கூடியது. (2) நடத்தல் என்பது கற்ற பல இயக்கங்களின் கூட்டான செயல்; இந்த இயக்கங்கள் யாவும் பல்வேறு இயக்கங்களுடன் மேற்கொண்ட சோதனைகளால் பெற்றவை. வெற்றியாகவுள்ள இயக்கங்கள் மட்டிலுமே நடத்தலில் மேற் கோள்ளப் பெற்றவை. இதைச் சற்று ஆராய்வோம்.

முதலாம் யாண்டில் குழந்தை இருபோக்குகளில் தன் செயல்களைத் துலக்கம் அடையச் செய்கின்றது. ஒரு போக்கு இடப்பெயர்ச்சி பற்றியது; மற்றொரு போக்கு சமநிலை பற்றியது. முதல் சில திங்கள்வரை அது இடம் பெயர்வதில் சிறிதுகூட முயற்சி கொள்வதில்லை. 6-7 திங்களில் தரை யோடு தரையாக நகர" முயலுகின்றது; 8-ஆம் திங்களில் ஊர்வதில் வெற்றியடைகின்றது. சிறிது காலத்திற்குப் பிறகு கைகளாலும் முழங்கால்களாலும் எழுந்திருக்கக்கூடும்; 9.ஆம் திங்களில் நன்கு தவழ்ந்து செல்லும் அளவுக்குத் துலக்கமடை கின்றது. முதலில் வயிறு தரையில் இடித்துக்கொண்டு "பஞ்சாங்க கமஸ்காரம் செய்வதுபோல் கிடக்கின்றது. பிறகு மார்பைத் துரக்க முயல்கின்றது. முழுப்பளுவையும் கைகளின் மேலும் முழங்கால்களின் மேலும் நிறுத்த இப்பொழுது முடிகிற தில்லை. இயக்கங்கள் விகாரமாகத் தோன்றும். நாளடைவில் மார்பு தரையின்மீது படாமல் உடலை மேலே துக்கிக்கொண்டு கையையும் காலையும் ஊன்றி நிற்கின்றது. அடுத்தபடியாகச் காலை நீட்டி நிற்காமல் மடக்கிக் கொண்டு காவின் முட்டி தரையில் படக் கைமேல் ஊன்றி நிற்கின்றது. இந் நிலையில் பழகிய பின்னர், கால்களும் கைகளும் தொடர்புறுகின்றன. இதன் பின்னர் குழவி காலையும் கையையும் மாற்றி மாற்றித் தவழ்ந்து நடக்கின்றது. துலக்கமுறும் விகிதத்தில் குழந்தை களிடம் வேற்றுமை காணப்பெறினும், பெரும்பாலும் எல்லாக் குழவிகளும் ஊர்தல்-தவழ்தல்-நடத்தல் என்ற ஒழுங்கினையே மேற்கொள்ளுகின்றன. * *

78. #1-1, Guusf32- Locomotion, 79, சகதிலை.Briance. 80. ஊர்தல் அல்லது நகருதல்-Crawling.