பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்குமிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் tés

பதிலாக மிக்கி என்ற சொல்லைக் கையாளுவர். பசியினால் செயற்படும் பிராணி உடனே உணவு தேடும் ஊக்கியைப் பெறுகின்றது. கித்தலால் ஏற்படும் செயல் குருட்டுத்தண்மாக இருக்கலாம். ஆனால் ஊக்கியால் ஏற்படும் செயலில் ஒரு நோக்குண்டு; திசையுண்டு. சுருங்கக் கூறின், உந்தல் உள்ளி ருந்து தள்ளுகின்றது; ஊக்கி ஒருபொருத்தமான திசையில் தள்ளுகின்றது."

ஊக்குநிலை வகைகள்

ஊக்கு நிலைகளை மூவகைப்பகுத்துப் பேசலாம். அவை: (i) உயிரியல் ஊக்கிகள் (ii) வேட்கைகளும் வெறுப்புகளும் (iii) பயின்ற ஊக் கி கள். இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

உயிரியல் ஊக்கிகள்: உடலின் உள்நிலைகளுக்கேற்றவாறு இவை நம்மிடம் தோன்றுகின்றன. பசி, தாகம், தூக்கம், பாலுந்தல் போன்ற உந்தல்கள் உயிரியல் ஊக்கிகளாகும். இவற்றுள் பசியை வைத்து விளக்குவோம். குருதியில் சருக்கரைச் சத்து குறையும்பொழுது இரைப்பை சுருங்குவதால் பசி உண்டா கின்றது. இதனால் பிராணிகளுக்கு நிலைகுலைவு உண்டா கின்றது. இதுவே அவற்றை உணவுதேடும் ஊக்கத்திற் செலுத்துகின்றது. மற்றும், தத்தம் இயல்புக்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு உணவைப் பெறுவதற்கும் பிராணிகள் பயிற்சி வாயிலாகத் தெரிந்து கொள்ளுகின்றன. அதற்கான பழக்கங் களையும் மேற்கொள்ளுகின்றன. பசி முதல்நிலை உந்தலாகவும்", உணவு அருந்தும் பழக்கம் வழிநிலை உந்தலாகவும்" அமைகின்றன. குறித்த நேரத்தில் நாம் உணவு அருந்தும் பழக்கத்தின் காரணத்தால் அந்நேரங்களில் நமக்கு பசி உண்டா கின்றது. இயற்கையான பசி இல்லாத காலத்தும் நம்மைக் க்ள்ர்த்தக்க உணவு அண்மையில் இருப்பின் நமக்குப் பசி உண்டாகின்றது.

பசி நிக்குவதற்குரிய ஊக்குநிலைகள் நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்குக் காரண்மாக உள்ளன. ஆனால், இம் முயற்சிகளுக்கும் பசிக்கும் உள்ள தொடர்பை நாம் பெரும்பாலும்

5, agrééo-Motive. 6+ o-užihilisi, osmosoir-Biological motives. 7. pâîømao gj6øpøj-Disequaiibrium. 8. Op 56ờ sốlso av a-ö45&-Primary drive. 9, aloftswa w śssi-Secondary drive.