பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் 183

சார்ந்து நிற்க வேண்டிய நிலையில் உள்ளது. அதனது உடல் நலமும் மனவளமும் மற்றவர்கள் அதன்பால் காட்டும் அன்பால் அமைகின்றன. வீட்டில் பெற்றோரின் அன்பையும் பள்ளியில் ஆசிரியரின் அன்பையும் நாடவேண்டியநிலையில் உள்ளான் சிறுவன். ஆகவே, அவர்கள் அவனுக்காக இயற்றும் இன்பச் செயல்கள், அவனைக் கையாளும் முறை, அவனிடம் கொள்ளும் பொறுமை, அவனோடு ஆடும் விளையாட்டு, அவனது அச்சங் களைப் போக்கும் முறை, அவன் புண்பட்டால் அதனையாற்றும் வகை, அவன் வளர்ந்தபின் அவன் விடுக்கும் வினாக்கட்கு விடை யளிக்கும் முறை, அவனது செயலாக்கங்களுக்கும் கவர்ச்சி களுக்கும் அவர்கள் காட்டும் வழி ஆகிய யாவுமே பயன் தருவன ஆகும், பெற்றோர் குழந்தையிடம் காட்டும் அன்புக்கு அளவில்லை. ஆகவே. குழந்தை வீட்டில் சுயேச்சை பெறுகின்றது, பள்ளியிலும் குழந்தை சுயேச்சையுடன் வாழ வழி வகைகள் இருத்தல் வேண்டும். குழந்தைகள் ஆசிரியரைப்பற்றிக் கூறுங்கால் அவர் கற்பிக்கும் தன்மையைவிட, அவர் தம்மிடம் காட்டும் அக்கறை, பரிவு முதலியவற்றையே முக்கியமாகக் கவனிக் கின்றனர், ஆசிரியர் தந்தை நிலையிலிருப்பதால் அவரிடம் அன்பு எதிர்பார்க்கப் பெறுகின்றது. அன்பு வேண்டும்; ஆனால், உறுதியும் வேண்டும். மாணாக்கர்கள் கண்டிப்பாயும் நேர்மை யாயும் இருக்கின்ற ஆசிரியரைத்தான் பாராட்டுவர். இளக்க மானவரையும் உறுதியற்றவரையும் போற்றுவதில்லை; விரும்பு வதுமில்லை.

சிறுவன் இயல்பாகவே பாராட்டுதலை விரும்புகின்றவன்; பிறர் தன்னை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விழைபவன். ஆசிரியருக்குத் தன்பால் அக்கறை இல்லை என்று தெரிந்தால் வருந்துவான்; தன்னிடம் பாரபட்சமாக நடந்துகொண்டாலும் வருந்துவான். தன்னைப் புறக்கணித்தாலும் துன்புறுவான். வயது ஏற ஏற ஒப்பார் மதிப்பையும் பெற விரும்புகின்றான். ஆசிரியர் அன்பினால் மட்டிலும் நல்லாசிரியராகிவிட முடியாது. உள்ளன் பின்றிப் புறத்தே அன்புள்ளவர்போல் நடிப்பதாலும் பயன் இல்லை. உள்ளன்பு பிள்ளைகளின் நல்வளர்ச்சிக்கு ஒரு சிறந்த ஏதுவாகும். அன்பின் வழியது உயிர்நிலை என்ற வள்ளுவர் வாக்கை ஒர்க. அருள் என்னும் அன்பு ஈன்குழவி' என்ற அன்னார் பொன்னுரையை எண்ணி எண்ணி மகிழ்க.

நல்வாழ்வில் உள்ளக்கிளர்ச்சிகளின் பங்கு

மேலே கண்ட வெகுளி, அச்சம், இன்பம், அன்பு போன்ற உள்ளக்கிளர்ச்சிகள் வாழ்க்கைக்குச் சுவையளிப்பதால்,சாதாரண