பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி உளவியலின் இயல்பும் அளவும்

5


 என்றே கூறவேண்டும். மனிதனுடைய செயலைத் திட்டமாக முன்னரே அறிந்து முற்றிலும் அதன்மீது ஆட்சிகொள்ளமுடியும் என்று கூறுவது நடைமுறையில் இயலாததொன்று. நடத்தைக் கொள்கையினர் அஃது இயலுமென்று கூறினும் சிறந்த உளவிய லறிஞர்கள் அதனை ஒப்புக் கொள்ளார். எனினும், உளவியல் ஒரளவு பிறரை அறிந்து அவர்மேல் ஆதிக்கம் பெறமுடியு மென்று கூறுவதை அனைவரும் ஒப்புக்கொள்வர். இஃது இயலாவிடில் சமூகவாழ்வு எங்ஙனம் நடைபெறும்?

உளவியலைப்பற்றி இன்னொரு செய்தியும் ஈண்டுக் கவனிக்கத் தக்கது. இயற்பியல், வேதியியல், விலங்கியல் [1]போன்றவை இருப்பு நிலை நூல்[2]களாகும். அறநூல்[3], அளவை நூல் [4], எழிலியல் [5]போன்றவை உயர்நிலைநூல்[6]களாகும். முன்னவை உள்ளவற்றை உள்ளபடியே உரைக்கும், பின்னவை பொருள்கள் அல்லது நிகழ்ச்சிகள் எங்ஙனம் இருக்கின்றன என்று கூறாமல், எங்ஙனம் இருக்கவேண்டும் என்று இயம்பும். எடுத்துக்காட்டாக, அளவை நூல் நாம் எங்கனம் சிந்திக் கின்றோமென்று கூறாமல், உண்மையை அணுக வேண்டுமாயின் எங்ங்னம் சிந்திக்கவேண்டும் என்து விளக்குகின்றது, அறநூலும் நாம் எங்ங்ணம் ஒழுகுகின்றோம் என்று கூறாமல் எங்ங்ணம் ஒழுக வேண்டும் என்று நவில்கின்றது. உளவியல் இருப்புநிலை நூல்வகையைச் சேர்ந்தது. ஆகவே, அஃது உளத்தின் சிந்தனைகள், செயல்கள் ஆகிய அனைத்தையும் உள்ளது உள்ளவாறே கூறுகின்றது. அவற்றைச் சரியென்றோ, தவறென்றோ, நல்லதென்றோ, தீயதென்றோ முடிவுகட்டுவ தில்லை. அது இயல்பான [7]செயல்கள், பிறழ்வான [8]செயல்கள், பித்தர் செயல்கள் முதலிய அனைத்தையுமே விளக்குகின்றது, அது மதிப்புப்பற்றிய வினாக்களில் தலையிடுவதில்லை, ஆகவே, அறநூலும் அளவை நூலும் உளத்தின் செயல்களை அணுகும் முறைகளிலிருந்து அவற்றை உளவியல் அணுகும் முறையை வேறுபடுத்திக் காட்டுவது இன்றியமையாதது.


  1. 15,விலங்கியல் -Zoology.
  2. இருப்பு நிலை நூல்-Positive or descriptive sciences.
  3. 17.அறநூல்-Ethics.
  4. 18.அளவை நூல்..logic,
  5. 19.எழிலியல் -Aesthetics.
  6. 20.உயர்நிலைநூல்-Normative of evaiuative sciences.
  7. 21. இயல்பான-Normal
  8. 22,பிறழ்வான -Abnormal.