பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் #31

சிறிய திறனின் அவசியத்தையோ, புதிய அறிவின் தேவை யையோ அறிகின்றது, பிறகு இருமடங்கு முயற்சியுடன் செயலாற்றத் தொடங்குகின்றது. இது புதிதாகக் கற்க வேண்டிய திறனாக இருப்பின் குழந்தை மனஉறுதியுடன் கைகொள்ளும் தன் பயிற்சியால் மூத்தோர்களையும் வியப் படையும்படிச் செய்கின்றது; இதுே அதற்குத் தேவையான அறிவாக இருப்பின், அது மூத்தோர்களைப் பிடிவாதத்துடன் பல வினாக்களைக் கொண்டு துளைத்து அவர்களின் பொறுமை யையே சோதித்து விடுகின்றது, குழந்தை தானாகத் தேர்ந் தெடுக்கும் திட்டமாக இருந்தால் அதனை நிறைவேற்றுவதில் அது மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றது; செய்த வேலையையே திரும்பத்திரும்பச் செய்வதில் மகிழ்ச்சியையும் காட்டுகின்றது. இந்த அழுத்தமான அக்கறையே குழந்தை முதல் மூன்றாண்டுகளில் விரைவான முன்னேற்றம் அடைவதற்குக் காரணம் ஆகும். எனவே (1) தொடக்க ஆண்டுகளில் கற்றல் அழுத்தமான அக்கறையின் அடிப்படையில் அமைகின்றது.

குழந்தைகளிடம் இயல்பாக இருவகையான மாறுபட்ட உளப்போக்குகள் காணப்பெறுகின்றன. ஒருவகை, புதியன வற்றைக் காணல்; மற்றொருவகை, அறிந்தவற்றை ஒன்று திரட்டுதல், இவற்றை முறையே படைக்கும் உளபோக்கு கடை முறை உளப்போக்கு’ என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். இளமையில் குழவிகள் வியத்தகு முறையில் கற்பதற்கு இந்த உளப்போக்குகளே முக்கிய காரணமாகும். ஒரு குழந்தை ஒரு சிறு பொட்டலத்தைப் பார்க்கின்றது; அதன் விடுப்பூக்கம் கிளர்ந்தெழு கின்றது; அதன் அக்கறையால் உந்தப்பெற்று ஆராய்ச்சியில் இறங்குகின்றது; பல இடர்ப்பாடுகள் நேரிடுகின்றன; உடனே போருக்கம் கிளர்ந்தெழுகின்றது; இருமடங்கு அக்கறை உண்டா கிறது; இந்த அவசரமான ஆராய்ச்சியில் அதற்கு அதிக புத்தறிவு ஏற்படுகின்றது; கைத்திறனில் மேம்பாடு பெறுகின்றது; சமூகப் பொருத்தப்பாட்டின் அவசியத்தையும், கற்கின்றது. அடுத்த முறை ஒரு குப்பை வண்டி ஒட்டுபவனைக் காண்கின்றது; அவன்ைப்போல் தானும் செய்ய விழைகின்றது; முதன்மை யூக்கம் கிளர்ந்தெழுகின்றது; குழந்தை குப்பையோட்டிபோல் வாழவிழைகின்றது; இஃது இயலாததொன்று. இந்நிலை விள்ை

. உளப்போக்கு-Tendency. .ہ

Léol-3gjib 2-arúðurrão-Creative tendency. pool—gponso a.arijouršć-Routine tendency. பொட்டலம். Parcel. . (pg 3 gold géâth-Instinct of self assertion.

i