பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

கல்வி உளவியல் கோட்பாடுகள்


இவற்றில் வெளியிடுகின்றன என்று கருதுகின்றனர். குழவிகள். இவ்விளையாட்டில் தம் உடற்குறைவையும் நிறைவு செய்து கொள்ளுகின்றனர். ஆகவே, குழந்தையின் நடத்தையில் நசுக்கப்பெற்ற கவர்ச்சிகளும் பங்கு பெறுவதை அறிகின்றோம். எனவே (4) இளங்குழவிகளின் கற்றலில் கவர்ச்சிகள் நசுக்கப் பெறுதலும் பங்கு பெறுகின்றது; இக்கவர்ச்சிகள் மறக்கப்பெறினும், இவை அடுத்தாற்போல் குழந்தையின் நடத்தையிலும் கற்றலிலும் உறைப்பான முறையில் செல்வாக்கைச் செலுத்துகின்றன.

மாணாக்கர்கட்குத் தாம் கற்கும் பொருளின்மீது அக்கறை இருப்பின் அதனை ஊன்றிக் கற்பது எளிதாகும். ஆனால், பெரும்பாலான மாணாக்கர்கட்குத் தமது பாடத்தின்மீது கவர்ச்சி இல்லை என்பது தெளிவு. தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணமும் அது பிற்கால வாழ்வில் பயன்படும் என்பதும் கவர்ச்சிகளாக இருப்பதால் மாணாக்கர்கள் கற்கின்றனர். இவை நேர் கவர்ச்சியைப்போல் அவ்வளவு அதிகமானவை அல்ல. இத்தகைய கவர்ச்சிகளே மாணாக்கர்களின் வாழ்க்கையை ஆட்சி கொள்ளுகின்றன.

தற்காலப் பள்ளிகளில் கவர்ச்சி தரும் முறைகளில் பாடங்கள் பயிற்றப்பெறுகின்றன. உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகள் வகுப்பறையில் பயன்படுத்தப்பெறுகின்றன. தற்காலக் கல்வியின் கொள்கை 'செய்து கற்றல்', 'அநுபவத்தினால் கற்றல்' என்னும் வாய்பாடுகளில் அடங்கும். கற்கும் பொருள்கள் மாணாக்கர்களின் அநுபவத்துடன் பொருந்துவதால், அவர்கள் பாடத்தை உற்சாகத்துடன் கற்கின்றனர்.

கல்வியில் கவர்ச்சி ஒரு வழியாகவும் முடிவாகவும் அமைகின்றது; குழந்தையைப் பொறுத்தவரையில் கவர்ச்சி ஒரு வழியாக அமைகின்றது. ஆசிரியரைப் பொறுத்தவரையில் அஃது ஒரு முடிவாக அமைகின்றது. நன்னடத்தை, கல்வி, விளையாட்டு, இலக்கியம் ஆகியவற்றில் குழந்தையின் கவர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்தால், அஃது அவற்றில் எளிதாகத் திறனை. அடைகின்றது. நல்லாசிரியர் குழந்தைகட்கு வெறும் அறிவைப் புகட்டாமல், அவ்வறிவை அவர்களே அடைவதற்குத் தூண்டுகின்றார். கவர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்வதனை நோக்கமாகக் கொண்டே ஆசிரியர் தன் கற்பிக்கும் முறைகளை அமைத்துக் கொள்ளுகின்றார்.

ஒரு பாடத்தில் அக்கறையைக் கிளர்ந்தெழச் செய்யும் முறை: முதலாவதாக: ஆசிரியர் குழவிகளின் கவர்ச்சிகள் வயதிற்கேற்ப மாறுகின்றன என்றும், குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு