பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

கல்வி உளவியல் கோட்பாடுகள்



பொருள்கள் மட்டுமே படத்தில் பதிகின்றனேலா அங்ஙனம்ேம மனத்திலும் குவியத்திலுள்ள பொருள்கள்ே - கவனம் ெபறகின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒர் உயிரியின் செயலைப் படத்தில் (படம் 26) காட்டியுள்ளவாறு ஒரே மையத்தைக் கொண்ட மூன்று வட்டப் புலன்களாலாகியது எனக் கருதலாம். நடுவிலிருப்பது கவனத்தின் புலம்; நனவு நிலையிலுள்ளது. இடையிலிருப்பது தெளிவற்ற மங்கலான நனவுநிலைப் பகுதி. வெளிப்புறத்திலிருப்பது தூய்மையான இயற்புநிலை பற்றியயை யாயும் நனவிலி நிலையிலுமிருப்பது. ஏதாவது ஒரு மிகச் சிறிய பொருளைக் கூர்ந்து நோக்கும்பொழுது நடுப்பகுதி மிகக்குறுகி யிருக்கும்; பிற சமயங்களில் அது மிகவும் விரிந்து ஓர் இயற்கைக் காட்சி முழுவதையும் அடக்கக் கூடியதாக இருக்கும்.

   கவனத்தை நெறிப்படுத்தும் கூறுகள் : தூண்டல்களின் தேர்தலே கவனம் என்று மேலே கண்டோம். இத்தேர்தலில் எக்கூறுகள் பங்கு பெறுகின்றன? சரியான முறையில் மூளையை அடையும் தூண்டல்களே நம் செயலை அறுதியிடுகின்றன. தேர்தலின்றிப் படபடப்பாகவுள்ள தூண்டல்கள் சில சமயம் விரைவில் மறைகின்றன; அல்லது நரம்பு மண்டலத்தின் மேலிடங்களில் வன்மையற்ற பதிவுகளை உண்டாக்குகின்றன, தேர்ந்தெடுக்கப்பெற்ற கிளர்ச்சிகளே மனத்தில் புலன் காட்சிகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள் ஆகியவற்றை உண்டாக்குகின்றன; இவற்றின் விளைவாகத் தனியாளிடம் நிலைத்த மாற்றங்கள் கற்றல்மூலம் நடைபெறுகின்றன, கவனத்தை ஈர்த்தல் எல்லாத் துறைகட்குமே வேண்டிற்பாலது. வணிக விளம்பரத்தின் நோக்கம், பொருள் கொள்வோரின் கவனத்தை ஈர்ப்பது. ஆசிரியரின்நோக்கம், மாணாக்கர்களின் கவனத்தை ஈர்ப்பது.
   கனவோடை' எப்பொழுதும் தெளிந்த ஆற்றொழுக்கைப் போன்றதன்று. அது தவளைப் பாய்ச்சல் போல் அங்குமிங்கும் தாவிச் செல்கின்றது. அஃது ஒரே திசையில் நெடுநேரம் செல்வதுமில்லை. நம்முடைய கவனம் பல பொருள்களுக் கிடையே ஊசலாடலாம். கவனத்தைப் பெறுவதற்கும். அதை நிலை நிறுத்துவதற்கும் சாதகமான கூறுகள் உள்ளன், அவற்றைப் புறவயமானவை, அகவயமானவை என்று 'இரண்டு. வகையாகப் பிரிக்கலாம். நம்முடைய கவனத்தை, ஈர்க்கக்கூடியபொருள்களின் சிறப்பியல்புகளும் பண்புகளும்' புறவய

16. gerGames--Stream of consciousness. 17. §opulous Lyssir-Characteristics. 18. Laoruiser-Qualities,