பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

கல்வி உளவியல் கோட்பாடுகள்


புலன் காட்சி

அறிவு வளர்ச்சிக்குப் புலன்களின் பயிற்சி மிகவும் இன்றியமையாதது என்று முன்னர்க் கூறினோம்.[1] இவண் அதனை மீட்டும் ஒருமுறை படித்துப் பயன் பெறுக.

ஒரு குழந்தையின் அநுபவம் வளரவளர அது தன் புலன் உணர்ச்சி[2]களுக்குப் பொருள் காண்கின்றது; விளக்கம் பெறுகின்றது. நாளடைவில் குழந்தை புலன் உணர்ச்சிக்கு அதிகக் கவனம் செலுத்தாது அதன் விளக்கத்திலேயே கருத்தினைச் செலுத்துகின்றது. அதுபவத்திற்கேற்பப் புலன் உணர்ச்சிகளின் விளக்கம் பெறுதலே புலன்காட்சி[3] என வழங்கப்பெறுகின்றது.

முதன்முதலில் ஒரு குழந்தை மாங்கனியைப் பார்க்குங்கால், அது மனஉணர்ச்சி, காட்சியுணர்வு, ஊற்றுணர்வு, சுவையுணர்ச்சி போன்ற புலன் உணர்ச்சிகளைப் பெறுகின்றது. அடுத்த முறை அது மாங்னியைக் காணும்பொழுது, அதன் முதல் அநுபவத்தால் அதன் புலன் உணர்ச்சிகள் சிக்கலாகின்றன. குழந்தை அக்கனியின் சுவையை நினைவில் வைத்திருக்கின்றது; உண்பதற்கு அது நன்றாக இருக்கும் என்பது அதற்குத் தெரியும். இறுதியாக அது புலன் உணர்ச்சிகளில் கவனம் செலுத்துவதில்லை; ஆனால், அதன் புலன் காட்சியில் கவனம் செலுத்துகின்றது, அக்காட்சி அஃது உண்ணக்கூடிய ஒருபொருள் என்பதை உணர்த்துகின்றது. இம்மாதிரியான செயல்முறையில் குழந்தை தன் அதுபவக் குறைவினால் புலன் உணர்ச்சிகளுக்குத் தவறான விளக்கமும் பெறுகின்றது.

குழந்தைகளின் புலன்காட்சி புலனிடானவை; நுணுக்கமற்றவை. அவர்கள் நேரில் பார்ப்பவைகளுக்கும் பார்ப்பதாக நினைப்பவைகட்கும் வேற்றுமை அவர்கட்குப் புலப்படுவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் "பொய்" சொல்வதாக நாம் சில சமயங்களில் கருதுகின்றோம். அவர்கள் ஓவியங்கள் வரைவதிலும் இக்குறையே காணப்பெறுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு குதிரையை வரையும்பொழுது தான் பார்ப்பதை வரைகிறதில்லை; தன் மனத்தில் தோன்றுவதையே வரைகின்றது.

பயிற்றலில் சிறுவர்களின் புலன்காட்சியின் பரப்பை விரிவடையச் செய்யவேண்டும். புலன்காட்சியே எண்ணங்-


  1. பக்கம்.75.
  2. புலன் உணர்ச்சி-Sensation.
  3. புலன்காட்சி-Perception.