பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

285

இதனால் பழைய பழக்கங்கள் பயிற்சியின்றி மறைந்து போகும். (எ.டு) ஒரு முறையில் கையெழுத்துக் கெட்டவர்களுக்கு வேறொரு முறையில் (Style) கையெழுத்துப் பழக்கத்தைத் தருவது பயன்தரும், ஒரு பழக்கத்தைக் களைய வேண்டுமாயின், அதே நிலையில் பயன்படும் வேறு நற்பழக்கங்களை அமைக்க வேண்டும். (எ.டு: ஆசிரியர் விடுக்கும் வினாவுக்கு மாணாக்கன் எழுந்து நின்று பல்வேறு உடலசைவுகளுடனும் புய அசைவுகளுடனும் விடை தரும் பழக்கமுள்ளவனாக இருந்தால்: அவனை உட்கார்ந்து கொண்டே பதிலளிக்குமாறு பயிற்சி தரலாம்.

இரண்டாவது வகைப் பழக்கங்களைக் களைதல் கடினம். ஆழ்ந்து படிந்த உள்ளக்கிளர்ச்சியின் காரணமாகப் படிந்திருக்கும் பழக்கத்தைக் களைந்த பிறகு புதிய பழக்கத்தை ஏற்படுத்தலாம். தண்டனையாலோ கடிவதாலோ அவற்றை அகற்ற முடியாது. (எ.டு) நகம் கடித்தல் ஒரு சிறுமியிடம் பழக்கமாகப் படிந்திருந்தால், அவளைக் கடிதல் கூடாது. அவளைப் பரிவுடன் கவனித்து, அவள் தோற்றத்தில் அக்கறை காட்டி, உரிமையுடன் நகங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும்.

திறன்கள்

ஏதாவது ஒன்றின்னக் கற்றதின் பயனாக எளிதாகச் செய்தலே திறன்[1] எனப்படும். பெரும்பாலும் கற்கும் செயல்களைக் குறிப்பிடும்பொழுதுதான் திறன்' என்று பேசுகின்றோம். கையெழுத்து, நூல் நூற்றல், வீணையை மிழற்றுதல், கயிற்றின்மீது நடத்தல், தட்டச்சுப் பொறியினை இயக்குதல் போன்ற செயல்களைப் பேசும்பொழுது திறனையும் சேர்த்தே குறிப்பிடுகின்றோம். திறனையடைதலைப்பற்றி அறிய வேண்டுமாயின் மிகச் சிக்கலான கையெழுத்து கற்கும்பொழுது ஏற்படும் பல்வேறு செயல்களைக் கவனித்தால் உண்மை புலனாகும். ஒரு சிறு குழந்தை தன் பெயரை எழுதும்போது கவனிக்க குழந்தையின் செயலில் உடலும் உள்ளமும் பங்கு பெறுகின்றன; எழுதுகோலை இறுகப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு கோட்டையும் துன்பத்துடன் கூடிய முயற்சியால் அமைக்கின்றது; நாக்கை நீட்டிக் கொண்டும் உடம்பை முறுக்கிக் கொண்டும் தன் உடல் முழுவதையும் இயக்குகின்றது; பெருமூச்சு விடுகின்றது; தன்னுடைய முயற்சியால் களைத்துப் போகின்றது. முதிர்ந்தோர் செயல் வேறு விதமானது; அதை அவர் வெகு-


  1. திறன்-skill