பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

கல்வி உளவியல் கோட்பாடுகள்


சமாளிக்க வேண்டும். பெற்றோர்களை நேரில் சந்தித்துப் பேசுவதுதான் இதற்கு வழி. சில சமயம் பெற்றோர்கள் தம்முடைய குழந்தைகளைத் தாழ்த்திப் பேசுவதைப் பொறுக்க மாட்டார்கள், பையன் தவறு செய்யவில்லை என்றும் சாதிப்பர். அன்புடனும் பரிவுடனும் அவர்களை அணுகித் தானும் பெற்றோர்களும் ஒத்துழைத்தால்தான் குழந்தையின் சங்கடங் களை அகற்றிக் குழந்தையை முன்னேற்ற முடியும் என்பதை அவர்கள் மனம் உணரச் செய்தல் வேண்டும்.

ஆறாவதாகக் குழந்தை வாழும் சூழ்நிலையை மாற்றக்கூடுமா என்பதை ஆராயவேண்டும். தக்க தனிப்பட்ட பள்ளியிலோ, விடுதிகளிலோ அதனைப் பயிற்றுவிக்க முடியுமா என்பதைப் பெற்றோர்களைக் கலந்து யோசிக்கவேண்டும். தற்காலிகமாக ஒரு மகிழ்ச்சிச் செலவு, அல்லது ஒரு விடுமுறை தந்து குழந்தை யின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை உண்டு பண்ணலாம்.

நெறி பிறழ்ந்த சிறுவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிப் பிரச்சினை. எனவே, எல்லோருக்கும் எக்காலத்திற்கும் பொருந்துவதான திருத்த முறைகளை விரிவாகக் கூறுவ தென்பது இயலாததொன்று.

கனவிலி மனம்: அதன் தன்மையும் முக்கியத்துவமும்

ஐந்தாவது இயலில் உள்ளக்கிளர்ச்சிகளை நசுக்குவதால் நேரிடும் அபாயங்களை ஓரளவு கண்டோம். இயல்பு பிறழ்ந்த நடத்தைகளைப் பற்றியும் நெறி பிறழ்ந்த நடத்தைகளைப் பற்றியும் மேலே கண்டோம். ஒரு குழந்தையின் வளர்ச்சியில் இவை யாவும் நேரிடக்கூடும். நேரிடாமல் இயன்றவரைத் தடுப்பதே பெற்றோர், ஆசிரியர்களின் கடமையாகும். அத்தகைய நடத்தைகள் மாணாக்கர்களிடம் தோன்றும் பொழுது அவற்றைச் சமாளிக்கும் முறைகளையும் அவர்கள் அறிந்திருத்தல் வேண்டும். இதற்கு உள்ளத்தின் பகுதிகளைப் பற்றி ஓரளவு தெரிந்திருத்தல் இன்றியமையாதது.

உளத்தின் மூன்று பகுதிகள் : ஒரு சில மக்களின் பெயர் நாம் நினைவு கூரும்பொழுது உடனே நினைவுக்கு வருவதில்லை. அப்பொழுது நாம் நெஞ்சில் இருக்கின்றது, நினைவிற்கு வரவில்லை என்கின்றோம். வேறு வேலையாக இருக்கும் பொழுது அந்தப் பெயர் திடீரென்று நினைவிற்கு வருகின்றது. இத்தகையவை நாம் அடியோடு மறந்து போனவை அல்ல. எனவே, நினைவுகள் நனவில் இருப்பன, நனவில் அடங்கி கிடப்பன, நனவற்றன என் மூன்று வகையாகும். இவற்றிற்