பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

371


கூர்ந்தால், ஒரு கிளையிலிருந்து ஆற்றல் பிறிதொரு கிளைக்கு மாற்றப்பெறுகின்றது என்பதை நாம் நம்பலாம்; இந்தச் சந்தர்ப்பங்களில் உடைமையூக்கம் நன்கு செயற்படுகின்றது -இது பர்ட் தரும் விளக்கம்,

களவினைத் தடுக்கும் முறைகள்: எது எப்படியாயினும் ‘இளைதாக முள் மரம்கொய்க’ என்ற கருத்துப்படி இத்தீய பழக்கத்தினை வேரிலேயே களைந்துவிட வேண்டும்; தொடக்கத்திலேயே இதனைப் போக்கிவிட வேண்டும். (1) உடைமை பற்றிய கருத்தினைக் குழந்தை விளங்கிக் கொள்ளாதிருந்தால், அக்குழந்தைக்கு அதனைக் கற்பிக்கவேண்டும்; அதனை மற்றவர்கள் நிலையில் வைத்துத் தன்னுடைய பணத்திலிருந்து வாங்கின பொருளைப் பிறர் எடுத்துக்கொண்டால் தனக்கு எப்படி இருக்கும் என்பதை உணரச் செய்யவேண்டும். இதனால் திருடும் மனப்பான்மை மாறி பொருளை இழந்தவர்கள்பால் அநுதாபம் பிறக்கும். அதன் பிறகு பொது சொத்து [1] என்பதன் கருத்தினையும் உணரச் செய்யவேண்டும். சிலர் இதனை என்றுமே அறிவதில்லை. பூங்கா, பள்ளிக்குரிய பொருள்கள், தெருக்கள் முதலியவற்றைப் பயன்படுத்துவதிலிருந்தே இது புலனாகும். ஆனால், இதையே முற்றிலும் நம்பியிருத்தல் கூடாது. கண்டுபிடிக்கப்பெறாமல் களவு நடைபெறும் வாய்ப்புகளைக் குறைத்தல் வேண்டும்.

(எ-டு) வீட்டில் பணப்பை குழந்தைக்குக் கிட்டாது செய்தல், அறைகளைப் பூட்டி வைத்தல், சரக்குகளைச் சரிபார்த்து வைத்தல் முதலியன; பள்ளியிலும் இம்மாதிரியே செய்தல். குழந்தைக்குத் தேவையான பொருள்களையும் நாம் தேவை எனக் கருதும் அளவுக்குக் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அதன் விருப்பத்தை நிறைவேற்றுதல். (ii) ஒரு சிறுவனுக்கு ஒரு பொருள் மிகவும் இன்றியமையாததாக இருப்பின் அதை ஏற்ற வழிகளில் எப்படி எப்படிப் பெறலாம் என்று கற்பிக்கலாம். ஒழுங்காக வேலை செய்து ஒரு குறிப்பிட்ட வருவாயை அடையும் வழி காட்டினால் சிறுவன் தொடர்ந்து திருடுவதை விட்டுவிடக் கூடும். இப்பொழுது படிப்படியாக அறநிலைக் கல்வியைக் கற்பித்தல் பயன்தரும். சிறுவன் கையிலேயே பணத்தைக் கொடுத்துச் சில பொருள்களை வாங்கி வரும் பொறுப்பையும், குடும்ப வரவு-செலவுக் கணக்கை எழுதிவரும் வாய்ப்பையும் தருதல் சிறந்த பயன் அளிக்கலாம். (ii) சில சமயங்களில் திருடுவதற்கும் குற்றம் புரிந்து மனநிறைவு கொள்ளும் மனப்-


  1. 43. பொதுச் சொத்து-Common property.