பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

381


நிலையும் குழவியின் மனத்தே எழும். தன்முயற்சி என்பது சிறிதும் இல்லாமற் போகும். உள்ளுற அன்றிப் புறத் தோற்றத்தளவில் மட்டும் ஒழுங்குமுறைக்கு ஒப்ப ஒழுகி அடங்கி நிற்கின்ற போலி நிலையும் விளையும், பகற்கனவு கண்டு கற்பனையுலகிற் புகுவதும் நிகழும். இவை அனைத்தையும் ஆராய்ந்து தக்க வழியில் ஊக்கத்தினை விளைவித்து மனநிலையைச் சமநிலையிற் கொண்டுவந்து சமுதாயத்தோடு பொருத்தமுற்று வாழுமாறு குழவியைத் திருத்துவதே ஆசிரியரின் கடமையாகும். இந்த முயற்சியில் குடும்பமும் பள்ளியும் ஒத்துழைத்தாலன்றி வெற்றி காண்பது எளிதன்று. இதற்கேற்ற கல்வித் திட்டம் வகுப்பது கல்வி அறிஞர்களின் கடமை; அதனை வெற்றியுடன் நிறை வேற்றுவது ஆசிரியரின் பொறுப்பு. அடிப்படைக் கல்வித் திட்டம் நன்னிலையில் செயற்பட்டால் இதில் ஓரளவு வெற்றிக் காணலாம்.