பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ää

மதிப்பீடும் சோதனையும் 405

(3) பொருள்களின் வரையறைவுகள் கூறுவது, தெளிவு படுத்திக் காட்டுவது தொகுப்பது, வகுப்பது, விரிப்பது, சுருக்குவது முதலியதிறன்களையெல்லாம் இவ்வகைச் சோத்ண்ை களால்தான் அளந்தறிய இயலும்.

புதிய முறைச் சோதனைகள் புதிய முறைச் சோதனைகள் என்பவை ஒரு தனியாளின் பண்புகளை ஒரு எண் மதிப்பால் விளக்குவதற்கென்று ஆய்ந்து திட்டமிடப்பெற்ற நிலைமையாகும். இவற்றில் கிட்டத்தட்ட முப்பத்தைந்துக்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. என்றாலும், இவற்றை அறிஞர்கள் மீட்டறிதல் வகை (Recognition type), நினைவுகூர் வகை (Recal type) என இரு கூறிட்டு வழங்குவர். - -

மீட்டறிதல் வகையில், சரி.தவறு சோதனைகள் பொறுக்குச் சோதனைகள், இணைக்கும் சோதனைகள் முதலியவை அடங்கும்; நினைவுகூர்வகையில் நிரப்புச் சோதனைகள் முதலியவை அடங்கும். தேர்வுத் துறையில் முன்னேற்றம் அடைய அடைய, அறிஞர்கள் புதிய வகைகளைக் கண்டு கொண்டே உள்ளனர். எனவே, இவ்வகைகளின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே உள்ளது. ஆனால், ஏழு அல்லது எட்டு வகைச்சோதனைகள் நடைமுறையில் பயன்பட்டு வருகின்றன.

சரி-தவறு சோதனைகள்: சில குறித்த தொடர் மொழி களைக் கொடுத்து அவற்றுள் வரும் கருத்துகள் சரியானவையா, தவறானவையா என்பதற்கேற்பக் காக்கைப்புள்ளியையோ சுழியையோ இடும்படி கூறுதல், இவற்றையே வினாவாக அமைத்து ஆம்', 'இல்லை, தெரியாது’ என்ற விடைகளில் ஒன்றை எழுதுமாறும் கூறலாம். r

(எ.டு) அடியிற்காணும் சொற்கள் சிலவற்றில் எழுத்துப் பிழைகள் உள்ளன. சரியானவற்றிற்கு நேராக என்றும், பிழை ய்ானவற்றிற்கு நேராக x என்றும் குறிகளை இடுக. -

1. எண்னை 5. முறுகன் 2. நாறாயணன் 6. அரங்கேற்றம் 3. கோதும்பை 7. வாளைப் பழம் 4. கோத்தான் ஐ. வியாளன்

என்பன போன்றவை.

8. புதிய முறைச்சோதனைகள்.New type-tests. 9. Fifl-gsugu Gorrāshowsair-Yes or no type tests,