பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதனும் சூழ்நிலையும்

51



மனித உடம்பு என்றும் செயல் நிறைந்துள்ளது, பொறிகள் அனைத்தும் நம்மிடம் ஒரு தாக்கலை அல்லது. அதிர்ச்சியை உண்டாக்குகின்றன. இத் துரண்டல்கள் நமக்குள்ளோ அல்லது நமக்கு வெளியிலோ சில தகவல்களை நமக்கு உணர்த்துகின்றன. தூண்டல்கள் பொறிகளைத் தாக்கி, புகு வாய்கள் மூலம் நரம்பு மண்டலத்தை அடைகின்றன; நரம்புத் தொகுதிகள் வழியாக (பொருத்துவாய்கள்) நரம்புத் துடிப்புகள் மூளையை அடைந்து அங்குப் புலப்பாடுகளை உண்டாக்கு கின்றன. பிறகு இத்துடிப்புகள் தசை அல்லது சுரப்பிகளில் (இயங்குவாய்களில்) செயல்களை எழுப்புகின்றன. தூண்டல்கள் உறைப்புடன் (intensity)இருந்தால்தான் புலனுணர்ச்சி ஏற்படும். மங்கலான நிறம், மிகத் தாழ்ந்தகுரல், தெளிவற்ற மனம் முதலியவை நம்மிடம் உணர்ச்சியை உண்டாக்குவதில்லை. அன்றியும் தூண்டல்கள் சற்று நேரமாவது தங்கினால்தான் புலனுணர்ச்சி[1] உண்டாகும்.

இங்கு நாம் அறியவேண்டியது பொருத்தப்பாட்டின் முதல் நிலையைப் பற்றியே. அதாவது, நம் உடலிலும் சூழ்நிலையிலும் எழும் தூண்டல்களைக் கொள்வதைப்பற்றியே அறிந்து கொள்ள வேண்டும். பொறிகள் இல்லையேல் பொருத்தப்பாடு முற்றிலும் நடைபெறாது; நம்மையும் உலகைத்தையும்பற்றிய அறிவு சிறிதேனும் நம்மிடம் உண்டாகாது. ஆகவே, அவற்றைப்பற்றி நன்கு அறிந்து கொள்வோம்.

காட்சிப் புலன் - கண்

காட்சிப்புலன் மனிதன் பெற்றுள்ள பேறுகளுள் தலை சிறந்தது. அதற்கு உறுதுணையாக இருப்பது கண் என்னும் உறுப்பு. கண்ணிற் சிறந்த உறுப்பில்லை' என்பது ஆன்றோர் வாக்கு. இதனால் கண்தான் தலைசிறந்த உறுப்பு என்ற உண்மை புலனாகின்றது. இராமன் கானாளச் செல்லவேண்டும் என்ற இரண்டாவது வரத்தைக் கேட்கவேண்டா என்று. கைகேயியை வேண்டும் தயரதன் கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்' என்று கூறும் வாக்கினை எண்ணிக் கண்ணின் சிறப்பினை உணர்க,

கண்ணின் அமைப்பு : நாம் கண் என்று வழங்குவது கண்ணுண்டையையும், அதனை இயக்கிவைக்கும் கண் தசை


  1. 91.புலனுணர்ச்சி-Sensation.