பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

கல்வி உளவியல் கோட்பாடுகள்


உணர்வுகளுடன்-பல்வேறுபட்ட வேறு சுவைப் புலனுணர்களுடன்-கலந்தே பெறுகின்றோம். (எ.டு.) சூடான காஃபி. காஃபியின் சுவை உவர்ப்பு: சருக்கரை சேர்ந்திருப்பதால் இனிக் கின்றது. ஏனைய அநுபவங்கள் யாவும் சுடுபுலன், தொடுபுலன், நாற்றப் புலன் ஆகியவற்றால் ஏற்படுபவையே.

எல்லாரும் எல்லாச் சுவைகளையும் சம அளவில் அறிந்து அநுபவித்தல் இல்லை. எவ்வளவு பட்டறிவு பெற்றிருந்தாலும், ஒரு சிறு பகுதியினரிடம் சுவையறியும் தன்மை சரியாக அமை வதே இல்லை; பல்வேறு நிலைகளில் அவர்கள் சுவையை அறிய இயலாதவர்களாக உள்ளனர். இவர்களை நிறக் குருடர்களுடன் ஒப்பிடலாம். ஒருகால் அவர்களிடம் பிறவியிலேயே சில குறிப் பிட்ட புகுவாய்கள் வளர்ச்சியுறாமல் இருத்தலும் கூடும். சுவைப் புலனும் தூண்டலைக் கொள்ளும் பல சாதனங்களுள் ஒன்று. உலக அறிதலுக்கு இது முதல் அடியாகும்.

நாற்றப்புலன்.மூக்கு: மணம் அறியும் உணர்ச்சி மனித னுக்கு மிகவும் குறைவான அளவில் வேண்டப் பெறுவது; ஆனால், அஃது அவன் சூழ்நிலைகளைச் சரியாக அறிந்து கொள்வதற்குத் துணை செய்கின்றது. மக்களிடை இப்புலன் சிறப்பு நிலையுற்று விளங்கவில்லை. நாயும் எலியும் மோப்பம் பிடிப்பதில் தலை சிறந்தன. அவற்றிற்கு மக்கள் அவ் வழியில் தோற்றுப்போகின்றனர். நாற்றப்புலன் உணவுப்பொருளைத் தெரிந்தெடுப்ப தற்குப் பயன்படுகின்றது; ஆதலின் இது வாய்க்கருகே இடம் பெற்றுள்ளது. மோப்பத்தினாலேயே குமட்டும் பொருள்களை அறிகின்றோம். மக்கள் உயர்நிலை அடைய அடைய இப் புலன் தன் பெருமையை இழந்து வருகின்றது; என்றாலும், மண்டை யில் முதல் முதல் பிரிந்த நரம்பு இப்புல நரம்பே என்பதை மறத்தலாகாது. நாற்றப் புலனின் அண்ணனே சுவைப் புலன். இவை இரண்டும் தொடக்கத்தில் உணவுப் புலன் அல்லது மருந்துப் புலன் என ஒன்றாக விளங்கின. காட்சிப் புலன், கேள்விப் புலன் ஆகியவை போன்றே இதுவும் தொலைவுப் புலனே'. [1]நவீன வாழ்விற்கு இதுவும் மிகவும் வேண்டப்படுவது. .

முகர்தலால் விளங்கும் நாற்றப் புலனுக்கேற்ற பொறிமுக்கு. உயிர்ப்போடு தொடர்புபட்டிருப்பதால் உயிர்ப் பென்றும் இப் புலனை வழங்குவர். கண்டு கேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும் ஐம்புல இன்பம் என வள்ளுவப்-


  1. 149.தொலைவுப் புலனே-Distance senses.