பக்கம்:கல்வி எனும் கண்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கல்வி எனும் கண்


போன்று கோல்டு ஸ்மித் என்ற ஆங்கிலப் புலவர் காட்டிய என்ற ஆங்கிலப் புலவர் காட்டிய :கிராமப் பள்ளி ஆசிரியர் போன்று முற்றும் கற்று உணர்ந்தவர்களாய்-ஊருக்கு வழிகாட்டும் உத்தமராய், எதுவரினும் கலங்காத உள உரம் உடையவராய்-தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்-தலை நிமிர்ந்து மலையினும் மாணாப் பண்பு பெற்ற பெரியவராய் வாழ்ந்துவந்தனர். ஆனால் இன்றைய ஆசிரியர்கள் நிலையினை எண்ணிப் பார்க்கக் கூடவில்லை. எங்கோ ஒரு சிலர் பழைய பண்பாட்டு நெறி மாறாமல் வாழ்கிறார்கள். என்றாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் தாழ்வுற்றுத் தறிகெட்டுத்தானே வாழ்கிறார்கள். அவர்களைப் பின்பற்றி மாணவர் நடந்தால் என்னாகும்? பட்டங்கள் பெறுவதிலும் எத்தனை ஏமாற்றம். பல பல்கலைக் கழகங்கள் காளான்களாகத் தோன்றி-அரசு தரும் உரிமம் இன்றியே (அங்கீகாரமின்றியே) செயல்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்து, பின் நடுத்தெருவில். நிற்கவிடுகின்றன. ருபாய் இருநூறும் முன்னூறும் தந்தால் டாக்டர் பட்டம் பெற வாய்ப்பும் உண்டே! இவை பற்றியெல்லாம் நாள்தோறும் நாளிதழ்களில் செய்திகளைக் காண்கின்றோமே! பட்டங்கள் பெறுவதைப்பற்றியும் நகைப்புக்கிடமான வகையில் பல செய்திகள் வருகின்றனவே. ‘டாக்டர்’ பட்டம் பெறுவதற்குப் பணமே முக்கியம். படிப்பு முக்கியமில்லை என்று சில ஆண்டுகளுக்குமுன் ஒரு சிறந்த நாளிதழில் அன்னையார் ஒருவர் எழுதிய கட்டுரை என் நினைவுக்கு வருகின்றது. அதை யாராவது -எந்தப் பல்கலைக் கழகமாவது மறுத்ததுண்டா? உண்மையை எப்படி மறுக்கமுடியும்?

மேலை நாடுகளில் சிறப்பாக அமெரிக்காவில் தமிழ் நாட்டுப் பழங்காலக் கல்வி முறையினை, நான் சில ஆண்டுகளுக்கு முன் சென்றபோது: கண்டு மகிழ்ந்தேன். என் நூலிலும் (ஏழு நாடுகளில், எழுபது நாட்கள்) அதுபற்றிக் குறித்துள்ளேன். ஒரே பாடத்துக்கு. நான்கு ஆசிரியர் என்ற அவல நிலை அங்கில்லை. ஒரே பேராசிரியரின் கீழ், ஒரே