பக்கம்:கல்வி எனும் கண்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பல்கலைக் கழகங்கள்
57
 

நடத்தும் பொறுப்பினைப் பல்கலைக் கழகமே கொண்டிருந்தாலும், அதை நடத்தத் தனி நிறுவனம் ஒன்றை:அமைத்து அதனிடம் ஒப்படைக்க வேண்டும். அது. பதிவாளர் அடியின் கீழோ வேறு வகையிலோ அடக்கமாகாது தனி நிலையில் இயங்கவேண்டும். தேர்வுக்குரியோரை- வினாத்தாள் தயாரிப்போர்- திருத்துவோர் பட்டியலைப் பல்கலைக் கழகம் தரலாம். தேர்வுகளும் நான் முன்னமே குறித்தபடி மாணவர் படித்த கல்லூரியிலேயே நடைபெறுவது தவறு.• உண்மையான அறிவுடையாரைக் கண்டறிய அது உதவாது. இதுபற்றி முன்னரே விளக்கியுள்ளேன். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற தேர்வுக் குழுவே தனி ஆதிக்கம் பெற்ற கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்லூரிகளுக்கும் உரிய தேர்வை நடத்தவேண்டும்.

நாளிதழ் வழியே (8.11.91-இந்தியன் எக்ஸ்பிரஸ்) ஒரு மாணவர் முறையாகப் பணம் கட்டித் தேர்வு எழுதியும் பதினான்கு மாதங்களுக்கு மேலாக அவர் தேர்வு முடிவினைத் தராத காரணத்தால், அவர் வழக்கிட, உண்மை கண்ட நீதிமன்றம் அவருக்குப் பல்கலைக்கழகம் இருபத்தெட்டாயிரம் (28,000) நட்டஈடாகத் தரவேண்டும் என ஆணையிட்டதென்பதை அறிய வருந்த வேண்டியுள்ளதல்லவா! இத்தகைய குறைகள் தவிர்க்கப் பெறவேண்டும். முறையான கவனிப்பும் மேற்பார்வையும் இருப்பின் இவை நிகழ வழி இல்லையே!.

நாட்டுப்புற அல்லது கிராமப்புறப் பல்கலைக் கழகங்களும் நாட்டில் சில உள்ளன. அவையும் மாநில அரசின் எல்லைக்குள்ளாகவே வரவேண்டும். கிராமங்களைப் பற்றி அறியும் வாய்ப்பு மாநில அரசுக்கே உண்டு. அங்கு வாழும் மக்களுக்கு உரிய தேவையான முறையில் கல்வி அளிக்கும் நெறி அறிந்து


• The present examination system is most unreliable, leads to doubts among students that the system is corrupt. Union Minister for .Human Resources Developing. Mr. Chimanbhai Metha. (Hindu 24-9-90)