பக்கம்:கல்வி நிலை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கல்வி கி 2ல

ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் ஈர்ந்தண் முழுவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர் பைதல் உண்கண் பணிவார் புறைப்ப்ப் படைத்தோன் மன்ற அப்பண்பி லாளன் இன்னது அம்ம இவ் வுலகம் o இனிய காண்கிதன் இயல்புணர்ந்தோரே. (புறம்,194). ஒரு வீட்டில் சாப் பறை அடிக்க; ஒரு மனையில் கலி யாண முழவு அதிா; கணவ ைேடு கூடியுள்ளவர் மலர் அணிந்து மகிழ; பிரிந்திருப்பவர் கண்ணிர் சொரிந்து அழ, செல்வர் களித்து வாழ; வறியர் பசித்து வருந்த, இன்ன வா.அ விபரீத நிலையில் இந்த வுலகத்தை அந்த மலரவன் படைத்திருக்கிருன்; இங்கே துன்பமே அன்றி இன்பம் இல்லை; எங்கும் கொடுமையும் தீமையுமே மண்டி யுள்ளன; அல்லலான இவ்வுலக நிலையை உணர்ந்து பேரின்ப விட்டுக் குரிய நல்ல உறுதி நலன்களை உணர்ந்து செய்து கொள் ளுங் கள் என உலக மக்களை நோக்கி நன்கணியார் என்னும் புல வர் பெருமான் இங்ஙனம் உரிமையோடு உரைத்திருக்கிரும்.

படைத்தோன் அப் பண் பிலாளன் எனப் பிரமாவைக் குறித்து இவர் வருந்தி இகழ்ந்திருப்பது இவருடைய மன ங்லையையும் அருள் நீர்மையையும் நேரே விள க்கியுள்ளது.

உலக வாழ்க்கையில் மக்கள் படுகிற துயர நிலைகளைக் கண்டபொழுது கவிஞர்களுடைய உள்ளம் உருகி இரங்கு. கிறது; மனவேதனையான அந்த இரக்கத்தால் சிருட்டிகருத் தாவையும் அவர் இவ்வாறு இடித்து மொழிய கேர்ந்தார். ' - நல்ல உத்தமிக்குப் பொல்லாத ஒருவன் கணவனும் வாய்ந்திருந்தான்; அன்பு நலமின்றி ங்ாளும் அவளைத் துன் புறுத்தி வந்தான். அவனிடமிருந்து அவள் அல்லல் அடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/116&oldid=552042" இலிருந்து மீள்விக்கப்பட்டது