பக்கம்:கல்வி நிலை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞ ன் 113

கொலையா இன மேலோர் குளிர்வெண் குடைக்கிழ்ப் பலயான மன்னர் பலர் போற்ற வந்தான் மலையாகம் போழாக மற்றிவனே மாய்ந்தான்; நிலையாமை சால நிலைபெற்ற தன்றே. (சூளாமணி)

வந்துடன் வணங்கும் வானேர் மணிபுனை மகுடகோடி தந்திரு வடிகள் ஏந்தும் தமனியப் பீடம் ஆக இந்திர விபவம் பெற்ற இமையவர் இறைவர் எனும் தத்திரு உருவம் பொன்றத் தளர்ந்தனர் அனந்தமன்ருே? - (யசோதாகாவியம்) கடுங்கால் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்.

(சிலப்பதிகாரம்) வைகல் தோறும் இன்பமும் இளமையும் - எய்கணே நிழலில் கழியும் இவ்வுலகத்து. (நற்றிணை) சீலமும் தருமமும் சிதைவில் செய்கையும் சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய மூலம்வந் துதவிய முவர்க்கு ஆயினும் காலம் என்று ஒருவலே கடத்தல் ஆகுமோ?

(இராமாயணம்)

விண்ணில் இன்பமும் விதல் கேட்டுமால் மண்ணில் இன்பமும் மாய்தல் காண்டுமால் எண்ணில் இன்பமாம் ஈறி லாததே - நண்ணி நாமினி நயக்கற் பாலதே. (சாந்திபுராணம்)

நெருதல் என்பது சென்றது; நின்ற இன்றும் செல்லா நின்றது; முன்சென்று வருநாள் கண்டார் யாரே? அதனுல் ஒருநாள் கைப்படுத் துடையோர் இன்மையின் நல்லது நாடுமின் உள்ளது கொடுமின்:

15 து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/119&oldid=552045" இலிருந்து மீள்விக்கப்பட்டது