பக்கம்:கல்வி நிலை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞன் 123

ஆட்சித் துறைகளின் காட்சிகளை அரசர்க்கு எடுத்துக் காட்டி அடுத்து அடுத்து இடித்து அறிவுறுத்தி கம் கவிஞர் கள் அரசுக்கும் ஆட்சிக்கும் நாட்டுக்கும் கலம் பல புரிந்து வந்துள்ளனர். இவரது உபகார நிலைகள் உயர் காமுடையன.

--- தமிழறிஞர்களுக்கு அரசியல் நிலை அவ்வளவாகக் கெரியாது என அதில் எவ்வளவோ தெரிக்கவர்போல்இக்கா லத்தில் சிலர் இறுமாந்து பேசுகின்றனர். அப்பேச்சு அவ சது சிறுமையையும் மடமையையும் நேரே வெளிப் படுத்தி கிற்கிறது. கபட வஞ்சனைகளைச் சாதுரிய சாகசமாய்ப் புரிந்து வருவதே அரசியல்என்றுகளித்துத்திரிவது இளித்து வெறுக்கத் தக்கது. கவிஞரைக் கண் எனப் பேணி உரிமை யோடு போற்றிவக்க உண்மை அரசுகள் ஒழிந்து போன மையால் புன்மைகள் புகுந்து கொள்ள நேர்ந்தன. பழைய "கன்மைகள் வளமையாக வந்து நிறைந்த போதுதான் உல கம் செழுமையாகச் செழித்து விளங்கும். தேச சுதந்திர மும், மான வீரமும், ஞானசிலமும் மனிதனுடைய வாழ்வை

மகிமைப்படுத்திப் புனித நிலைகளில் பொலிந்து வருகின்றன.

வாழ்வு தாய்மை தோய்ந்துவரின் அது மாண்பாய் உயர்ந்து விளங்குகிறது. நெறிமுறைகளோடு நியமமாய்ப் பழகி வருகின்றவனே விழுமிய நிலையில் வெளிவருகின்ருன். புகழ்பெறுவது என்பது மனித வாழ்வின் உயர் பேருய் அமைந்துள்ளது. இசைமிகப் பெற்றுத் திசைமெச்ச வாழ வேண்டும்; அவ்வாறு வாழ்பவனே உயர்தர மனிதனுய் ஒளிபெற்று வருகின்ருன்; அங்ங்னம் வாழாதவன் வாழ்வு

ாழ்வா யிழிந்து பாழான நிலையில் பழி படுகின்ற..அ

வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய வாழ்வாரே வாழா தவர். (குறள்,240)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/129&oldid=552055" இலிருந்து மீள்விக்கப்பட்டது