பக்கம்:கல்வி நிலை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கல்வி கி 2ல

1. பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்!

40 பிறர்மனை அஞ்சுமின்! பிழை உயிர் ஒம்புமின்!

அறமனை காமின்! அல்லவை கடிமின்! கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விர கினில் ஒழிமின்! இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா;

25 உளநாள் வரையாது; ஒல்லுவது ஒழியாது;

செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்! மல்லன்மா ஞாலத்து வாழ்விர் ஈங்கு. (சிலப்பதிகாரம்)

உலக மாந்தரை நோக்கி இளங்கோவடிகள் இங்ங்னம் உரைத்திருக்கிரு.ர். இவர் சேர மன்னர்மரபினர். கோவலன் சரிதையை உலகம் ஆவலோடு அறிய ஒரு சீவிய காவிய மாப் பாடி யிருக்கிரு.ர். சிலப்பதிகாரம் என்னும் பேரால் அது விளங்கி வருகிறது. அந்தக் காவியத்தைப் பூர்க்கி செய்து முடித்துவிட்டு முடிவில் இப்படி. அறிவு நலங்களைத் தொகுத்து அற்புதமா அளித்துள்ளார். தமிழ் மொழியில் பெரும் புலமையுள்ள இக் கவிஞர் தமிழ் மக்களுக்கு மாக்கி சம் கூருமல் உலகம் முழுவதுக்கும் ஒருங்கே விழுமிய நீதி களைப் போதிக்கிருக்கிரு.ர். மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் என உலக மாந்தர் யாவரையும் உரிமையோடு எதிர்முகமா அழைத்து இவ்வாறு உறுதி நலங்களை உணர்க் தி யுள்ளார். கவிஞர்களுடைய பரந்த நோக்கமும், விரிந்த காட்சியும் சிறந்த மாட்சியும் உயர்ந்த எண்ணமும் உள்ளப் பண்பும் எல்லாரும் இன்பு ற்று வாழ வேண்டும் என அன்புற்று அறிவு கலங்களை ஆர்வத்தோடு அவர் அருளிவரும் அமைகி. யும்.அதிசயநிலையில்ஒளிபுரிந்து உவகை சாந்துமிளிர்கின்றன.

மனிதன் இனியனுய் வாழ வேண்டிய புனித நிலைகள் கவிகளில் சுவையாய் வெளி வந்துள்ளன. பிறவுயிர்களுக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/132&oldid=552058" இலிருந்து மீள்விக்கப்பட்டது