பக்கம்:கல்வி நிலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கல்வி கி2ல

அலகிலின்பங்களாய்க் கலைகள் பெருகி யிருக்கின்றன. நூல்

களின் உருவங்களில் மருவியுள்ள அவற்றின் நிலைகள் பல

வகைகளில் உயர்ந்துள்ளன. சில நினைந்து சிங்கிக்க வந்தன.

தொல்காப்பியர் தரு தொல்காப்பியமும் பல்காப்பியர் புரி பல்காப்பியங்களும் திருவள்ளுவரின் அருள்மொழி அமுதமும் கம்பர் கவியின் செம்பொருள் இன்பமும் சிந்தா மணியின் நந்தா அணியும் சிலப்பதிகாரத்தின் செவ்விய சுவையும் மணிமேகலையின் மதியுயர் கலேயும் வளையா பதிவரு இளையா நலமும் குண்டல கேசியின் மண்டருள் மதியும் சூளா மணியின் தோலா இனிமையும் மேருமந் தரத்தின் மேலாம் மதியும் கல்லாடத்தின் எல்லா எழிலும் அகம்புறம் அமைந்த சுகம்புரி நிலையும் பத்துப் பாட்டின் வித்தக விளைவும் பெருங்கதை பெருகிய அருஞ்சுதை அமைதியும் கந்த புராணத்தின் அந்தமில் இன்பமும் பாரதம் படிந்த நீரத நிறையும் பெரிய புராணத்தின் அரியபண் பாடும் திருவிளை யாடலின் அருள்விளை யாடலும் திருவாசகம் தரு தெய்வீக நிலையும் திருவாய் மொழியின் திவ்விய ஒளியும் திருப்புகழ் தெளித்த விழுப்புகழ் விரிவும் தாயு மாணவரின் துயபே ரின்பமும் அருட்பா சுரந்த தெருட்பா வமுதும் இன்னே ரன்ன பன்னரும் பனுவல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/26&oldid=551952" இலிருந்து மீள்விக்கப்பட்டது