பக்கம்:கல்வி நிலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ' நூல் 19

இகிகாசங்கள், புராணங்கள், காவியங்கள், கருமநீதி ஸ் முதலிய பலவகை நிலைகளில் கலை பாவியிருக்கிறது. எவ் வழியும் அறிவின் சுவைகள் பெருகியிருத்தலால் யாண்டும் அது தலைமையாய் நிலவி வருகின்றது. கருதிப் பயிலும் தோறும் அரிய பல உறுதி கலங்களை அருளி வருதலால் மனித சமுதாயத்துக்கு அவை தெய்வ நிதிகளாய் எய்தி புள்ளன. அவற்ருல் உயிர்கள் உய்கி பெற்று வருகின்றன.

சிறந்த அரசர்களுடைய வாழ்க்கை வரலாறுகளும், குண கீர்மைகளும், கொடை கலங்களும், வினையாண்மைகளும், விாப்பிரதாபங்களும் கவியுருவங்களில் அமைந்த பொழுது அவை காவியங்களாய்ச் சிவியங்களை விளக்கி வந்தன.

இராமனது அற்புத சரிதம் இராமாயணம் ஆயது. பாண் டவர் வரலாறு பாரதம் ஆய் விரிந்தது.

கண்ணன் கதை பாகவதமாய் விளைந்தது. முருகப்பெருமான் அருளாடல் காந்தமாய்க் கனிந்தது. சீவகன் சீவியம் சிந்தாமணி என எழுந்தது. திவிட்டன் சரித்திரம் சூளாமணியாய்த் தோன்றியது. அரிய அன்பர்கள் சீவியம் பெரிய புராணமாய் மேவியது. கோவலன் கதை சிலப்பதிகாரமாய்ப் பிறந்தது. மணிமேகலை துறவு மணிமேகலையாய் மருவியது. உதயணன் சரிதம் பெருங்கதையாய் உதயமாயது. குண்டலகேசி கதை குண்டலகேசி என வந்தது. அரிய தரும நீதிகள் யாவும் திருக்குறள் எனத் திகழ்ந்தன. காதல் விரங்கள் எல்லாம்.அகம் புறம் என வந்தன. தெய்வ நீர்மைகள் பலவும், திருமுறைகளாய் விளைந்தன.

இன்னவாறே தமிழ் மொழியில் அரிய பல அறிவு.நால் கள் இனிது விளைந்துள்ளன. உலக போகங்களை மறந்து உணர்வின்பங்களையே எவ்வழியும் நுகர்ந்து மகிழும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/25&oldid=551951" இலிருந்து மீள்விக்கப்பட்டது