பக்கம்:கல்வி நிலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூ ல் 37

ஒதுங்கினல் மகிழ்வு பெறுவர்; இல்லையானல் கோடை வெயிலில் சிக்கிய மான்கள்போல் மறுகி அலமந்த முஅவார்.

மேலோரது இனிய அறிவின் சாாம் நால்; சால்புடைய I ■ --- கல்லோர் கேண்மை மேலான மேன்மை யுடையது; இக்க இரண்டும் நல்ல ஆதரவாய் நலம் பல புரிகின்றன.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. (குறள், 783) மேலான நூலின் சார்பும், பண்புடையாளர் தொடர்பும் இன்ப நிலையங்களாம் எனத் தேவர் இங்கனம் உணர்த்தி யுள்ளார். இருவகை நிலைகளும் ஒருமுகமாய் அறியவந்தன. அறிவு நூல்களையும் ஆன்ருேள்களையும் உரிய துணைக ளாக பருவி புள்ளவர் பெரிய இன்பங்களையும் அரிய மகிமை களையும் அடைந்து யாண்டும் உயர்வு பெறுகின்றனர்.

“My never-failing friends are they, With whom I converse day by day.” (Southey)

அறிவு நூல்கள் எனது இனிய நண்பர்கள்; காள்தோ ஆறும் அவர்களோடு நான் பழகி மகிழ்கின்றேன்” என ராபர்ட் சதே என்னும் ஆங்கில அறிஞர் இங்கனம் கூறி .யிருக்கிரு.ர். நூலோடு பழகல் சாலவும் மேலான நலமாம்.

ஒருவனுடைய வாழ்வு இனிமையும் புனிதமும் அடைய வேண்டுமாயின், உயர்ந்த நூல்களோடும் சிறந்த மேலோர் களோடும் அவன் தொடர்பு கொண்டு யாண்டும் உறவா ஒழுகி வரவேண்டும் என்பது ஈண்டு துணுகி உணர வந்தது.

புஸ்தகம் அஸ்த பூஷணம்” என வடமொழியில் ஒரு பழமொழி வழங்கிவருகிறது. மனிதனுடைய கை நல்ல ஒரு நாலை வைத்திருப்பின் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/43&oldid=551969" இலிருந்து மீள்விக்கப்பட்டது