பக்கம்:கல்வி நிலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 57

கும் ஒப்பாம். எல்லையில்லாத கல்வி யறிவு மனிதன் உள்ளத் தில் நிறைந்துள்ளது; அதனை அவன் அறிந்துகொள்ளவேண் டும். வெளியே யிருந்து யாதும் புதிதாய் வருவது இல்லை; எல்லா அறிவு கலங்களும் மனிதனுடையஉள்ளத்திலிருந்தே உதய மாகின்றன. இதயம் விரிய உதயம் ஒளி விசுகிறது.

வெளியே மணலைத் தோண்டினுல் தண்ணீர் வரும்: தாகம் தீரும்; உள்ளே மனதைத் தோண்டினுல் நல்ல அறிவு வரும்; எல்லா இன்ப நலன்களும் அதனுல் அடைய லாகும்.இம்மை மறுமைகளை அது செம்மையா அருளுகிறது.

படித்தல் பயிலல் கற்றல் என்னும் வினைக்குறிப்புக னால் கல்வியின் வடிவமும் வண்ணமும் வளமையும் அறிய லாகும். படித்தவன் என்பதினும் கற்றவன் என்பது உயர்ந்த மதிப்பு உடையது; கல்வியின் நிலை கருதத் தக்கது.

கருத்தை ஊன்றிக் கூர்ந்து கற்பதே கல்வியைவிரைந்து தேர்ந்து கொள்வதற்குச் சிறந்த வழியாம். கருத்து ஊன் மூத படிப்பு விருத்தி யடையாது; வெறுமையே அடையும்.

கருத்தோடு கூர்ந்து நோக்குபவன் ஒரு நிமிடத்தில் அடையும் அறிவைக் கருதாமல் படிப்பவன் ஒருநாள் ஆன அம் அடைய முடியாது. அடைவதை ஆய்ந்து கொள்ளுக.

கூரிய் நோக்கு சீரிய மேன்மைகளை ஆக்கிக்கொள்

கிறது. பழக்கமும் பயிற்சியும் கூர்மையாய்த் தோய்ந்து

வளின் சீர்மையான கல்வியறிவுகள் செழித்து வருகின்றன.

கலையறிவைப் பெறப் பலமுறைகள் இருப்பினும் உலையாத

பயிற்சியே தலைமையாய்ச் சிறந்து தகைமை சுரங்துள்ளது.

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/63&oldid=551989" இலிருந்து மீள்விக்கப்பட்டது