பக்கம்:கல்வி நிலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கல்வி கி 2ல

கூர்ந்த நோக்குட்ையவன் எதையும் தெளிவாக ஒர்ந்துகொள்ளுகிருன். உள்ளம் குவிந்து வரின் உணர்வு கலங்கள் அங்கே வெள்ளமாய்ச் சுரந்து விரைந்து வருகின்றன.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. (குறள் 396) கல்வியறிவு பெருகி வரும் நிலை ைய ஒர் உவமையால். தேவர் இங்ங்னம் காட்டியிருக்கிருர். மணலைத் தோண்டிய அளவு 虎六 பெருகி வரும்; அதுபோல் மனிதர் கற்ற அளவு: அறி வு மருவிவரும். மணல் உவமை உணர்வு நிலையமாயுளது. ஆற்று மணலுள் நீர் நிறைந்திருந்தாலும் அதனேக் தோண்டிய அளவுக்கே அது சுரங்து தோன்.அம்: தோண்ட வில்லையானல் அது தோன்ருது. மாந்தர் அகத்தே அறிவு மருவியிருந்தாலும் கற்ற அளவே அது தெளிவாய் வெளி வருகின்றது; கல்லாது விடின் அது காஅை மறைகின் றது. நீரும் அறிவும் சீரோடு ஈண்டு நேரே தெரிய வந்தன. மணலைப் பறிக்கப் ப றி க் க நிர் ஊறி வருதல்போல் அால்களைப் படிக்கப் படிக்க அறிவு தேறி வரும்: தேறலும் ஊறலும் ஒரு சேர இங்கே தேர்ந்து சிந்திக்க நேர்ந்தன.

அறிவுக்கு நீரை உவமை கூறியது அதன் தன்மையும் கன்மையும் கரு.கி. கிர்மையும் சிர்மையும் உடையது நிரோடு, நேர்மையாய் உணர வந்தது. உள்ளப் பெருக்கை உணர்ந்து கொள்ள வெள்ளப் பெருக்கு நேரே நின்றது. தோண்டச் சுரக்கும் நீர்; வ்ேண்ட்ச் சுரக்கும் விளைவு: கற்கச் சுரக்கும். அறிவு: கறக்கச் சுரக்கும் பால்; புரக்கச் சுரக்கும் புகழ்.

மணல் கேணி மனிதன் உள்ளத்திற்கும், நீர் அறிவுக் கும் தோண்டல் கற்றலுக்கும், ஊறல் அறிவின் தேறஅக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/62&oldid=551988" இலிருந்து மீள்விக்கப்பட்டது