பக்கம்:கல்வி நிலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கல்வி கி இல

இக் காலத்துப் படிப்பு முறை இந்நாட்டு மக்களுக்கு கலம் தராமல் நவைகளையே ஊட்டி வருகிறது; இதனைக் கல்வி என்று சொல்லலாகாது; படிப்பு என்று ஒரளவு நடிப் பாகச் சொல்லலாம். வேண்டாத படிப்புகள் எல்லாம் பிள்ளைகளுடைய உள்ளங்களில்புகுந்து அல்லல்களை விளைத்து வருகின்றன. ஒருவகையிலும் தேர்ச்சி யின்றிப் பலவழிகளி அம் அவர் தாழ்ச்சியடைந்துள்ளனர். வாயளவில் எதையும் பற்றித் துடுக்காகப் பேசுவதே மிடுக்கான படிப்பாக அவர் கருதிக் களித்து வருகின்றனர். உறுதியாக ஒன்றும் தெரி யாமல் மறுகி மயங்கி எங்கும் வறிதே உழலு கின்றனர். “The child becomes a talker in all, but a master in

none.” [Goldsmith]

பையன் எதையும் பற்றிப் பேசத் தெரிந்தான்;.ஆனல் ஒன்றும் நன்ருகத் தெரியாது’ என்னும் இது இங்கே அறிய வுரியது. இலக்கியம், கணக்கு, பூகோளம் முதலிய பல வகைப் படிப்புகளைப் பிள்ளைகளிடம் திணித்து வருதலால் அவர் திரிந்து வருவதைக் குறித்துக் கோல்டு ஸ்மித்து என்ப வர் இங்கனம் விநயமாக இகழ்ந்திருக்கிரு.ர். இகழ்ச்சிக்

-- ・イ ■ ■ -- __ - = குறிப்பில் உணர்ச்சி உவகைகள் உறைந் திருக்கின்றன.

__*

மேல் காட்டுப் படிப்பு உலக வாழ்க்கையோடு ஒட்டி யது; அதையே இப்படி அக்த அறிஞர் கிண்டல் செய்திருக் கிரு.ர். இக்காட்டுக் கல்வி உயர்ந்த பண்பாடு அமைந்தது; மேன்மையான ஆன்ம நோக்கமுடையது. கல்விக்குப் பயன்

ஒழுக்கம் என்று கருதி யுணர்ந்து உறுதி பூண்டு வருவது.

கற்க கசடு அற;. நிற்க அதற்குத் தக. (குறள், 391)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/78&oldid=552004" இலிருந்து மீள்விக்கப்பட்டது