பக்கம்:கல்வி நிலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 77

எல்லா இன்ப நலங்களும் புண்ணியத்தால் உளவாகின் றன. தன் உயிரைப் புனிதமாகப் பேணிப் பிறர் உயிர்கள் பால் அன்பு புரிந்து வருதலால் புண்ணியம் விளைகின்றது. இவ்வாருன உண்மைகளை யெல்லாம் உணர்ந்து கொள்ள மூலகாரணமாயிருப்பது கல்வியே ஆதலால் அது புண்ணிய போகங்கள் எவற்றிற்கும் வித்து என வந்தது. வித்து இல்லை எனின் மரம் இல்லை; மரம் இல்லையானுல் இலை தழை மலர் கனி யாவும் இலவாம். கல்வி இல்லையேல் யாதொரு பலனும் இல்லை; எல்லாம் பாழாம் என்பது இங்கே கருகி யுனா வக் தது. இந்த உருவக நிலையைத் துருவிநோக்கி உறுதியுண்மை களைக் கூர்ந்து ஒர்ந்து ஊன்றி உணர்ந்து கொள்ளவேண்டும். கல்வி மனிதனை மதிமான் ஆக்கி அரிய பல பண்பாடு களை அருளுகிறது; அதல்ை எவ்வழியும் சிறந்த இன்ப வாம்ல டையனுப் அவன் உயர்ந்து விளங்குகின்ருன்.

த ன்னைச் செப்பப் படுத்தித் தனது வாழ்க்கையை ஒழுங்காக கடத்தி எவ்வழியும் செவ்வையாய் உயர்ந்து வரு கின்றவனே கல்வியின் பயனே விரைந்து பெற்றவனுகின்ருன்.

“Education is the ability to meet life's situations.”

    • (Hibben) வாழ்க்கை நிலைகளை நல்ல வகையில் ஒழுங்குபடுத்தி கடத்தும் வல்லமையே கல்வியாம்” என ஜாண் ஹிபன் என்பவர் இவ்வாறு கல்வியின் நிலையைக் குறித்திருக்கிரு.ர்.

“The great aim of education is not knowledge but action” -(Herbert Spencer) கல்வியின் முக்கிய குறிக்கோள்.அறிவு அன்அ. கல்ல கடத்தையே’ என ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவர் இங்கி

-னம் உரைத்துள்ளார். உரைக் குறிப்புகள் உணரத் தக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/83&oldid=552009" இலிருந்து மீள்விக்கப்பட்டது