பக்கம்:கல்வி நிலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_

76 கல்வி நி2ல

புகழ்ந்து துதித்து மேலோர் போற்றி வரலாயினர். துதி மொழிகள் எல்லாம் அதன் அதிசய நீர்மைகளைத் துலக்கி வந்தன. அதனுடைய சுவைகளைக் கவிகள் சுகித்துள்ளனர்.

அயோத்தி நகரம் கோசலா தேசத்தின் இராசதானி யாயிருந்தது. அரிய பல வளங்கள் நிறைந்து எழில் ஒளிகள் மிகுந்து விழுமிய நிலையில் அது விளங்கி கின்றது. தனது காவிய நாயகனுகிய இராமன் அவதரித்திருக்த அக்தஊரைக் குறித்துக் கம்பர் உவந்து கூறி யிருக்கிரு.ர். கலையின் சுவை சுரங்து வந்துள்ள அந்த இனிய கவி அபலே வருகின்றது.

ஏகம் முதற் கல்வி முளைத்து எழுந்து எண்ணில் கேள்வி ஆகம் முதல் திண்பணே போக்கி அருந்தவத்தின் சாகம் தழைத்து அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து போகம் கனிஒன்று பழுத்தது போலும் அன்றே.

(இராமா, நகர, 75 புனிதமான இனிய பேரின்பங்கள் நிறைந்து ஒரு புதிய போக பூமிபோல் திருவயோத்தி பொலிந்திருந்தது என்று சொல்ல வந்த கவிஞர் பெருமான் இவ்வாறு சொல்லி யிருக்கிருர். பொன்கள் இழைத்து, மணிகள் அழுக்கி, அணிகள் குயிற்றி எவ்வழியும் அழகுகள் ஒழுகச் செய்த பெரிய மாட மாளிகைகள் யாண்டும் நீண்டு நிறைந்து மிளிர அந் நகரம் விளங்கி யிருந்தது என்று பாட வேண்டிய இடத்தில் இப்பாட்டு இப்படிக் கிளைத்து இனிது வந்துளது. அதிசயமான ஒர் இன்ப வுலகமாய் அங்ககர் இருந்தது என்பதை இங்ங்னம் வருணித்திருக்கிருள். வருண்னேஅற்புத மான ஒரு கருவின் உருவில் மருவி வந்துள்ளது. கல்வி கேள்வி தவம் அன்பு தருமம் போகம் என்னும் அருமை

கலன்கள் பெருமித நிலைகளில் பெருகி இங்கே கருத வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/82&oldid=552008" இலிருந்து மீள்விக்கப்பட்டது