பக்கம்:கல்வி நிலை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. க வி 83

துன்பத்தை அஞ்சுகிருன்; விரும்பியன பலவும் விலகிப் போகின்றன; வேண்டாகன பல விரைந்து எதிர் வருகின் தன. அல்லல் அவலங்களிலேயே அலமந்துழலுகின்ற மனி தனுக்கு நல்ல உறுதி கல்ங்களைக் காட்டிக் கவிகள் இகம் புரிக் தருளுகின்றன. அதன் உதவி நிலைகள் எவ்வழியும் செவ்விய காட்சிகளாய்ச் சிறந்து சீர்மை சுரந்து திகழ் கின்றன.

உலக நிலைகளையும் உறுதி உண்மைகளையும் தெளிவாகக் காட்டும் ஒர் அற்புதக் கண்ணுடி போல் கவிகள் பொற்ப மைந்துள்ளன. கால தேசங்களால் சேய்மைப்பட்டு மறைக் துபோயுள்ள மனிதர்களையும் பொருள்களையும் புனித போத னைகளையும் நேரே கொண்டுவந்து காட்டி உவகைகளை ஊட்டி அவை உதவி வருவன அதிசய வியப்புகளாய்த் துதிகொண் டுள்ளன. உருவப்படத்தினும் கவிப்படம் மிகவும் சிறந்தது; அகில் ஒருவனது உடல் நிலையை மட்டும் குறிப்பாக் காண லாம். இதில் மனிதனுடைய உருவம் பருவம் குணம் செயல் கடை உட்ை பழக்கம் வழக்கம் பான்மை மேன்மை முதலிய அனைத்தையும் தெளிவாகக் கண்டு விழி எதிரே காம் உடனி ருந்தவர்போல் உளம் மிக மகிழ்கின்ருேம். புவியில் நேரே காணுத எவரையும் நாம் கவியில் கண்டு களிக்கின்ருேம். அது காட்டிய படியே நம்மை ஆட்டி வசப்படுத்திக் கொள் ளுகின்றது. கவி ஒரு வீரனைக் கொண்டுவந்து காட்டுங்கால் கமக்கு விர வுணர்ச்சியை ஊட்டி விடுகிறது; வள்ளலைக் காட்டி உள்ளத்தை உருகச் செய்கிறது; ஒரு நீதிமானே கேர் நிறுத்தி நீதியைப் போகித்து நிலையை உயர்த்துகிறது. கருமம் சத்தியம் கருணை வீரம் மானம் நேர்மை வன்மை திண்மை மு. த லி ய நீர்மைகளை யெல்லாம் சீர்மையோடு உணர்த்தி கம்மைச் சிறந்த மேன்மையில் நிறுத்துகிறது. அதன் செயலும் இயலும் திவ்விய நிலையில் மிளிர்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/89&oldid=552015" இலிருந்து மீள்விக்கப்பட்டது