பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா


பகவதியாரின் பிறந்தவூராகும். அங்குக் “காரைகள் கூகை முல்லை” என்ற திருப்பதிகத்தில் இறுதிப் பாடலில், “திருநனி பள்ளியை நினைப்பவருடைய வினைகள் கெடும் - ஆணை நமதே” என்று பாடியுள்ளார்.

“இடுபறை யொன்ற அத்தர் பிரான்மேல் இருந்து இன்
இசையால் உரைத்த பனுவல்
நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க
வினை கெடுதல் ஆணை நமதே”–

என்பது அப்பாடல்.

சம்பந்தர் திருவேதிகுடிக்குச் சென்று பாடிய பதிகத்தின் இறுதிப் பாடலிலேயும் இவ்வாணை குறிக்கப் பெற்றுள்ளது.

“சிந்தை செய வல்லவர்கள் நல்லவர்கள்
என்ன நிகழ் வெய்தி இமையோர்
அந்த வுல கெய்தியர சாளும் அது
வேசரதம் ஆணை நமதே.”

சம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக் காட்டில் இருந்தபொழுது, சம்பந்தர் மதுரைக்கு வரவேண்டும் என்று அழைக்கப் பெற்றார். திருநாவுக்கரசர், “கோள்கள் தீமை பயக்கும் நிலையில் உள்ளன, செல்லற்க” என்றார். சம்பந்தர் கோளாறு திருப்பதிகம் பாடினார். அதன் ஈற்றுப் பாடல் வருமாறு:

“தேனமர் பொழில் கொளாலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான் முகன் ஆதியாய பிரமா புரத்து
மறை ஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்