பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

விசயநகர வேந்தர்கால அண்ணல் வாயில் கல்வெட்டில்' தடுத்தாட்கொண்ட நயினார் சிற்றம்பலவர் என்பவரும், பின்னங்குடிக் கல்வெட்டொன்றில்' நம்பி கருணாலையனான தடுத்தாட் கொண்டான் என்பவரும் குறிக்கப் பெற்றுள்ளனர். இவை சுந்தரர் வரலாற்றை நினைவிப்பனவாம்.

வழக்கு வென்ற திருவம்பலம்

வெண்ணெய் நல்லூரில் விளங்கும் பேரவையில் இறைவன் பொருவரும் வழக்கில் வென்றார். திருவெண்ணெய் நல்லூரில் “வழக்கு வென்ற திருவம்பலம்' என்னும் மண்டபம் இருந்ததனைக் குலோத்துங்க சோழனின் இருபத்தொன்பதாவது ஆட்சியாண்டுக்குரிய திருவெண்ணெய்நல்லூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது".

வழியடிமை கொண்டான்

இறைவன் வெண்ணெய்நல்லூர்ச் சபையில்,

“அருமறை நாவல் ஆதி சைவன்

ஆரூரன் செய்கை பெருமுனி வெண்ணெய்நல்லூர்ப்

பித்தனுக்கியானுமென்பால்

வருமுறை மரபுளோரும்

வழித்தொண்டு செய்தற்கோலை இருமையால் எழுதி நேர்ந்தேன்

இதற்கிவை என்னெழுத்து' எனும் மூல ஓலை காட்டி வழக்குவென்று ஆட்கொண்டார்.

இறைவன் வழிவழி யடிமையாகக் கொண்டதனால் “வழியடிமை கொண்டான்' என்னும் திருநாமம் பெற்றார்.