பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 57

இங்ங்னம் தம்பிரான் தோழர் என்ற சுந்தரத்திருப் பெயர் மக்கட் பெயராயமைந்து போற்றப்பெற்றமை அறிந்து இன்புறுவோமாக,

இனிச் சுந்தர பாண்டிய தேவரது இருபத்தொன்றாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று, திருப்புக்கொளியூர் குளக்கரையில் சுந்தரர் திருமேனி அரசனால் எழுந்தருளுவிக்கப் பெற்றது என்றும், அதற்குப் பாண்டி மண்டலத்து வியாபாரி அழகிய பாண்டிய தேவர் நிபந்தமாக 220 வராகன் புள்ளிக்குளிகை அளித்தார் என்றும் கூறுகிறது".

குளக்கரையில் சுந்தரர் திருமேனியை எழுந்தருளச் செய்தமை முதலையுண்ட பாலகனை அழைத்த அற்புதத்தை நினைவு கூர்தல் பொருட்டேயாம் என்பது ஊகித்தறிதற்பாலது.

கிருவடிப் போது நாறிய திருவிதி

சிவபெருமான் சுந்தரர்க்காகப் பரவை நாச்சியாரிடத்து ஒருமுறைக் கிருமுறையாகத் தூது சென்றார்.

'படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார் இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய்

நடந்த செந்தா மரையடி நாறுமால்'

எனத் திருநகரச் சிறப்பில் சேக்கிழார் பாடுவார். திருவாரூரில், திருவடிப் போது நாறிய திருவீதி, ' என ஒரு திருவீதியின் பெயர் கல்வெட்டிற் காணப்பெறுவது இவ்வரலாறு காட்டுவது ஆகும்.

கிருத்தொண்டத்தொகைச் சொற்றொடர்கள்

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் திருஞான சம்பந்தரை, "நற்கொன்றையான் அடியலால் பேனாஎம்பிரான் சம்பந்தன்' எனப் போற்றினார். மாறவர்மன் சுந்தரபாண்டியனுடைய 16ஆம் (கி.பி. 1222) ஆண்டுப் பின்னங்குடிக் கல்வெட்டில் சேரநாராயணபுரத்து வியாபாரி