பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

சுந்தரர் திருவாய் மலர்ந்தருளிய இத்திருப்பதிக முதற்குறிப்புச் சொற்றொடர் ஒரு வியாகத் தலத்திற்குப் பெயராய் அமைந்திருந்தது. இராச நாராயண மல்லிநாத சம்புவராயனின் கச்சித் திருமேற்றளிக் கல்வெட்டில், “நொந்தா வொண் சுடர் விளாகம்' என்பது குறிக்கப்படுகிறது".

சேரமான் பெருமாள்

சேரமான் பெருமானாயனார் சுந்தரருடைய உற்ற நண்பர். ஆகவே சுந்தரரைச் சேரமான் தோழர் எனல் பொருந்தும். பூரீவிரபாண்டிய தேவரது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டில் கையொப்பம் இட்டவர் ஒருவர் 'சேரமான் தோழர்' என்று இப் பெயரைப் பூண்டிருந்தார்". இராஜநாராயணச் சம்புவராயரது காஞ்சிபுரத்துக் கல்வெட்டு" உடையார் ஏகாம்பர நாதர்க்குரிய திருத்தோப்புக்களில் ஒன்று, 'சேரமான் பெருமாள் திருத்தோப்பு' என்ற பெயரால் அமைந்திருந்ததென அறிவிக்கிறது.

அவிநாசியில்

சுந்தரர் அவிநாசியில் நிகழ்த்திய அற்புதம் முதலையுண்ட பாலகனை அழைத்ததாகும். வீரபாண்டிய தேவரது அவிநாசியில் உள்ள பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு" தென்பள்ளியிலிருந்த சுந்தர நாயனார்க்கு அமுது அளிப்பதற்காகப் பாப்பாரப் பூண்டியாகிய வீரராசேந்திர நல்லூர் அளிக்கப் பெற்றதெனப் பகர்கின்றது. இக்கல்வெட்டில் கையொப்பமிட்டவருள் ஒருவர் 'தம்பிரான் தோழர்' என்ற பெயருடையவர் என்று அறிகிறோம். தம்பிரான் தோழர் என்பது சுந்தரருடைய பெயர்களில் ஒன்று.

'தம்பிரான் தோழர் மானக்கஞ்சாரர்' என்று ஒருவரைக்

குறித்துத் திருமுட்டம் கோயிலில் உள்ள அவரது படிமத்தின் கீழ் உள்ள கல்லெழுத்தினின்றறியப் பெறுகிறது".