பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

இக்கோயில் இறையகத்துச் சுற்றியுள்ள பகுதியில் நாயன்மார் சரிதங்களை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. அச்சிற்பங்களின் மேல் அவ்வச்சிற்பத்தை விளக்கும் சொற்றொடர்கள் காணப்படுகின்றன. சுந்தரருடைய வரலாற்றைக் குறிக்கும் சொற்றொடர்கள் பின் வருமாறு:

1. உடையநம்பி எழுந்தருளுகிறார்.

ஆவணவோலை காட்டினபடி. உடைய நம்பிக்கு ஒலை வென்றருளினபடி "

ஏயர்கோன் கலிக்காமாண்டார்.

திருமுருகன் பூண்டியில் பெற்றபடி

2

3

4

5. உடையநம்பி வேடர் வழிபறித்தபடி

7. அவனாசியாண்டார் முதலைவாய்ப்பிள்ளை.

8. சேரமான் பெருமாள் கதை.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒவியங்கள்

தஞ்சைப் பெருவுடையார்கோயிலில் கருவறையை ஒட்டிய திருச்சுற்றின் உட்புறத்தில் பல வண்ண ஒவியங்களும் நாட்டிய கரனச்சிற்பங்களும் உள்ளன. இவை இராசராச சோழன் காலத்தவை. இவற்றுள் சுந்தரர் வரலாற்றோவியத்தை மேற்குப் புறத்தில் காணலாம். இவ்வோவியங்களை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

தடுத்தாட் கொள்ளல்: முதல் ஒவியம் சுந்தரர் தடுத்தாட் கொள்ளப்பெற்ற காட்சி.

கிழவேதியர் கோலத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலை; ஒரு கையில் ஆவணவோலை; மறுகையை உய ர்த்திச் சபையவரை நோக்கி வழக்குரைத்தல். எதிரில் சுந்தரர் நிற்கிறார். அடுத்து, கிழவேதியர். கையிலே ஆவண ஒலையுடன் எழுந்து நிற்க, அந்த ஒலையுள் உள்ளதென்ன என்பதனை