பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

கல் சிரிக்கிறது


உங்களுக்காக வருத்தம் சேட். ஆனால் அவள் கஷ்டம் உங்கள் நஷ்டத்தை விட அதிகம். அப்புறம் நாளா வட்டத்தில்-அது நாளோ, மாதமோ, வருடமோஏதேனும் சாக்குச் சொல்லி-அப்போ என்ன சாக்குச் சொல்ல வருமோ, நகை எப்படி என் கைக்கு வந்தது என்பதற்கு-சமத்தாயிரு என்று கோமதியிடம் நகையை ஒப்படைச்சாகனும், என் பணத்தைக் கொடுத்து சேட்டிடம் ஸெட்டில் பண்ணச் சொல்வதற்கே, என்ன கேள்வி கேக்கறாளோ? சம்மதிக்கறாளோ இல்லையோ? இதுகளுக்கெல்லாம் பிசுக்கென்று ஒரு அசட்டுக் கெளரவம் வந்துவிடும். இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. கோமதி எல்லாம் தெரிஞ்சவளல்ல. அவளும் இடை மனுஷன் சொல்வதைக் கேட்பவள்தான். சேட்டின் அடகு வியாபாரம் லைசென்ஸ்ாடன் சாங்கோபாங்கமாக நடப்பதாய் வைத்துக் கொள்வோம். அப்பவும் கேலைத் தாக்கல் பண்ணுவானா? இவர்கள் ஒரு லேவாதேவிக்கு மூணு புத்தகம் வைத்திருப்பவர்கள். கிணறு வெட்டப் பூதம் புறப்படுவதை விரும்ப மாட்டார்கள். இதனால் ஏற்படக் கூடிய ஹானியை விட, படும் நஷ்டமே தேவலை, எப்படியும் கோமதியை முன்னாலேயே எனக்குத் தெரி யும், அவளுக்கு என்னைத் தெரியும் என்பது எந்த நேரத்தி அவனுக்குத் தெரியக் கூடாது. இதை எப்படி மானேஜ் பண்ணப் போறேன் ? இதெல்லாம், நம் இஷ்டப்படி நாம் நினைத்துக் கொள்வது. பாதுகாப்பாய் இருந்த பண்டத்தைக் காணோம் என்றால் சும்மா விட மாட்டான். இதென்ன இல்லி பில்லி சூன்யமா? முட்டாள் ஆக்கப்பட எவன்தான் விரும்புவான்? ஒரு கை பார்த்துத்தான் விடுவான். யார் யாரைச் சந்தேகப் படுவான்? எம்ப்ராய்டரி ஒர்க்கர் களையா? அவன் ஏமாந்த சமயம் இருந்தால்தானே அவர்