பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@fす。 字。牙rr。 # 3 தர்மராஜனுக்கு முகம் வெளிறிட்டது. அந்த நிறம் இன்னும் வெளுக்க முடியுமோ? முடியும் போலதான் இருக்கு. மார்ச்சுவரி வான் வந்து, சேட்டைத் துரக்கிக்கொண்டு போயாகி விட்டது. கூடவே நாய்த் தட்டும் போய் விட்டது. போலீஸ் - வந்தது என்னவோ நாலு பேர்தான். ஆனால் இடத்தை அப்படியே மொய்த்துக் கொண்டு அப் பிக் கொண்டாற் போலிருந்தது அவரை அவர்கள் சட்டை செய்யவே இல்லை. இருப்பதாகப் பாவிக்க வில்லை. வீட்டை அவர்களே சார்ஜ் எடுத்துக் கொண்டு. விட்டார்கள். அவரோடு யாரும் பேசக்கூட இல்லை. அவர்களே இதை எடுத்து, அதைத் திறந்து, அங்கே நோண்டி, இங்கே மூடி, என்னவோ பண்ணிக் கொண்டிருந்தார்கள். டப்பாவைக் கவிழ்த்தாற் போல் வீட்டைத் தலைகீழாக்கித் தட்டிக் கொண்டிருந்தார்கள். இத்தனை ரகளை அவசி யமா? ஆனால் இதுதான் அவர்கள் முறை போலும் ! எங்கேயோ அடித்தால் எங்கேயோ பல் போச்சு என்கிற மாதிரி. ஆனால் கேட்க முடியுமா? அவர் வழிக்கு யாரும் வரவில்லை. ஒரு கேள்வி கூடக் கேட்காமல் இது என்ன துப்பு: அவர் நடமாட்டத்தையும் யாரும் கட்டுப் படுத்தவில்லை. ஆனால் அவர் வெளியே போக நேரும்போது, சாப்பாட்டுக்கும் காப்பிக்கும் ஒட் டலுக்கோ - ப்ளேடு வாங்கக் கடைக்கோ - உள்ளேயே உட்கார்ந்திருந்தால், பைத்தியம் பிடித்து விடும். இதற்காக வெளியில் போகாமல் இருக்க முடியுமா?யாரும் போக வேண்டாம் என்று சொல்லவில்லை-வெளி வில் போகும் போதெல்லாம் ஒரு வால் அவர் பின்னால் ஒட்டிக் கொண்டது. எங்கே போனாலும் தொடர்ந்து.