பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

கல் சிரிக்கிறது


நின்று கொண்டிருந்தவள் சோபாவில் சாய்ந்தாள். கால் விட்டுப் போச்சு. பாவம். முகத்தில் அந்தப் போராட் டத்தைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. இருந்தாலும் உண்மையை உண்மையாகத் தேடுகிறாள். புருவங்களில் ஒரு காம்பிர்யம் சிறகு விரித்தது. 'காலா காலத்தில் கலியாணம் நடக்காட்டா ஸ்திரீ ஜன்மம் புருஷனுக்காக அப்படி ஏங்கறது. ஆயிரம் சுதந்திரம் பேசலாம். பேசறோம். ஆணுக்கு நான் எதிலும் சளைச்சவள் இல்லைன்னு சவால் விடலாம். விடறோம்.’’ - "ஆமாம்.' 'இருந்தாலும் இந்த மஞ்சளும் குங்குமமும் இருக்கிற வரைக்கும் தான் சமுதாயத்தில் எங்களுக்கு மதிப்பு. இந்த விவாக ரத்துச் சட்டம் எல்லாம் முழு சக்தியோடு: இயங்க, எங்கள் ரத்தத்தில் ஜன்மேதி ஜன்மமா ஊறித் தோஞ்சு போன இந்த மஞ்சள் குங்குமம் மறக்க இன்னும் எத்தனை ஜன்மங்கள் ஆகனுமோ? புருஷன் எங்களுடைய அந்தஸ்து சின்னம். இப்போ எனக்கு என் கணவர் மேல் ஆசை பொங்கலே. ஆனால் அவர் எனக்கு வேணும்.” - 'அதுதான் நான் தெரிந்து கொள்ள விரும்பினேன், என் குழந்தே, உன்னைக் கடவுள் காப்பாற்றுவார். சரி, நான் போயிட்டு வரேன்.” நீங்கள் போய்த்தான் ஆகணுமா?’ முனகினாள். 'நான் தனியாத்தான் இருக்கணுமா?’ 'நீ என்ன இன்னிக்குத்தான் தனியா யிருக்கயா?” 'இப்போத்தான் நினைப்பு வந்தது, பஸ் சார்ஜுக்குக் கூட உங்களிடம் காசு இல்லையே-'தன் பையுள் துழா வினாள். அவர் கையமர்த்தினார். "சிரமப்படாதே. இந்த நேரத்தில் பஸ் கிடையாது.