பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

69

. 6)f子。ー、女「fr。 இதென்ன புது அம்சம்? கிள்ளிப் பார்த்தால் வலிக்கறதே! நான் கனவல்ல. 'ஐயா அறியாமலே ஐயர் கிட்ட அருள் இருக்கு." இதை நான் ஏத்துக்கனுமா? என்ன செய்யலாம்? புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்து விட்டார். 5 அப்போதுதான் யாரோ ஆள் மூலம் வந்த அபிஷேக திரவியங்களை வெகு உன்னிப்பாய்ச் சரி பார்த்துக் கொண்டிருந்த மணி, நிழல் தட்டுவது உணர்ந்து நிமிர்ந்து... நிழலுக்குச் சொந்தக்காரனைக் கண்டதும், முகம் கறுத்தது. - ஏளனமாக, ஏது, பஞ்சகச்சமும், இடுப்பில் அங்க வஸ்திரமும், கட்டுக் கட்டா விபூதியும் அமர்க்கள மாயிருக்கு நாளைக்குத்தானே உன் முறை? இன்னிக்கே எழவெடுக்க வந்துட்டியா?" இன்னிக்கு வெள்ளிக் கிழமை அம்பாளுக்கு அபி. ஷேகம் பண்ணப் போறே. ஆகாத வார்த்தைகளைச் சொல்றே!’ - "என் வயத்தில் அடிச்சதுமில்லாமல் நியாயம் வேறே. பேச வந்துட்டான்!” : அவர் சிரித்து விட்டார். 'என்னப்பா, எல்லாரையும் போல் நான் தரிசனம் பண்ணக் கூடாதா?’’ s"--